‘போதை என் பெயரை கெடுத்துவிட்டது’ – ‘96’ படத்தின் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பிரத்யேக பேட்டி

 

‘போதை என் பெயரை கெடுத்துவிட்டது’ – ‘96’ படத்தின் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பிரத்யேக பேட்டி

‘96’ திரைப்படத்தின் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பிரத்யேக பேட்டி

சமீப காலமாக இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் முணுமுணுத்துக் கொண்டிருக்கும் ‘வாழா.. என் வாழ்வை வாழவே.. தாழாமல் மேலே போகிறேன்.. தீரா உள்ளூற்றை தீண்டவே.. இன்றே இங்கே மீள்கிறேன்.. இங்கே இன்றே ஆள்கிறேன்’ என்ற வரிகள் இடம்பெற்றிருந்த ‘Life of Ram’ பாடலுக்குச் சொந்தக்காரர், கார்த்திக் நேத்தா. நா.முத்துக்குமார் போன்ற ஆளுமைகளை இழந்து தவித்துக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவின் பாடல்களுக்கு உயிரூட்டத் துவங்கியிருக்கும் அவருடனான சிறப்பு நேர்காணல் பின்வருமாறு,

lyricist

அவரிடம் நாம் முன்வைத்த கேள்விகளுக்கு அவர் வெளிப்படையாகவும், தன் நிலை மாறாமலும் அளித்த பேட்டி நமது டாப் தமிழ் நியூஸ் யூடியூப் தளத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வீடியோவை நீங்களும் பார்த்திட கீழே இணைத்துள்ளோம்.

கார்த்திக் நேத்தாவிடம் நாம் முன்வைத்த கேள்விகளும், அவரின் ‘நறுக்’ பதில்களும் பின் வருமாறு, 

‘Life of Ram’ எழுதி அனைத்து தரப்பினரையும் உங்கள் பக்கம் ஈர்த்திருக்கும் நீங்கள், உங்கள் வாழ்க்கையை(Life of Karthik Netha) பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்?

சில நொடிகள் யோசித்துவிட்டு, “சின்ன வயசுல நான் குழந்தையா பிறந்தன்” என ஒரு வெடிச்சிரிப்பு. பின்னர் பேசத் தொடங்கிய அவர், “சேலம் மாவட்டத்தில் பிறந்து, அங்கேயே பள்ளி படிச்சிட்ருந்தன். 9-ம் வகுப்பில் இருந்தப்போ காதல் தோல்வி, சினிமா மேல ஆசை. மெட்ராஸ்க்கு ஓடி வந்துட்டன். இங்க முட்டி மோதி ஒன்னும் முடில. திரும்ப ஊருக்கே ஓடிப் போயி +2 வரை முடிச்சன். அப்புறமும் சினிமா தாகம் அடங்கல. அப்புறம் வீட்டாரின் அனுமதியோட நேரா மீண்டும் வந்து ரூம் எடுத்து, அப்பா அம்மாவின் பொருளாதார உதவியோட தான் வாய்ப்பு தேட ஆரம்பிச்சன். அப்போ தான் கல்லூரி காலத்துல ‘தொட்டி ஜெயா’ படத்தில் வாய்ப்பு கிடைச்சுது. 

netha

உங்கள் முதல் பட வாய்ப்பான ‘தொட்டி ஜெயா’ எப்படி கிடைச்சுது?

விரும்புகிறேன் படத்தின் துணை இயக்குநர் ரமேஷ், ஆதித்யா டீவில வர ‘டேடி எனக்கு ஒரு டவுட்டு’ புகழ் சரவணன் எல்லாரும் ரூம் மேட்ஸ்-ஆ இருந்தோம். அப்போ ரமேஷ் தான் சொன்னாரு, தொட்டி ஜெயா படத்தில் வாய்ப்பு கிடைக்கும், இளங்கோ அப்டிங்கரவர போய் பாருனு சொன்னாரு. அப்படி தான் அந்த வாய்ப்பு கிடைச்சுது. இந்த நேரத்துல ரமேஷுக்கும், இளங்கோ அண்ணனுக்கும் நன்றி சொல்லிக்கிறன். வழக்கான காதல், காமம் இல்லாத கதாநாயகியின் அறிமுக பாடல் எழுதும் வாய்ப்பு கிடைச்சுது. கல்கட்டாவுக்கு டூர் போற ஒரு கல்லூரி பெண்ணோட உணர்வை எழுதனும்னு டைரக்டர் சொல்லிட்டாரு. நம்ம சேலத்துக்கும் சென்னைக்கும் சுத்திட்ருந்த ஆளு. 

இருந்தாலும் நேதாஜியோட பெரிய ரசிகன்றதால கொல்கத்தா பத்தி கொஞ்சம் படிச்சிருக்கன். அதோட, இன்னும் கொஞ்சம் தெரிஞிசிக்க, கன்னிமரா லைப்ரரில நிறைய படிச்சன். சுருக்கமா சொல்லனும்னா கொல்கத்தாவோட மேப்ப சொல்ற மாதிரி பாட்டு இருக்கும். அதுல நமக்கு தெரிஞ்ச அழகியல், கவித்துவத்த சேத்து போட்டு அடிச்சி விட்டன். பெரிய பிரபலம் இல்லனாலும், பிள்ளையார் சுழி போட்டுச்சு அந்த பாட்டு. 

karthik netha

நீங்க வாழ்க்கையில விரக்தி அடைஞ்ச தருணம்னு எதாச்சும் இருக்கா? 

நான் முதல்ல விரக்திக்கே போனது கிடையாது. இப்படி ஒரு ஜந்துவானு, என்னைய பாத்து ஊருதான் விரக்தி அடைஞ்சிருக்கு. நிறைய ஷார்ப் தான் ஆயிருக்கன். விரக்திக்கு நான் போகம் இருக்க இன்னொரு முக்கியமான காரணம், என்னை யாரும் அங்கீகரிக்காம இல்ல, நான் பிரபலம் அடையறதுக்கு யாரும் தடையாகவும் இல்ல. எனக்கு நானே தான் தடை. நான் ஒரு வேகா பான்டு. ஒரு நாடோடி மாதிரி தான் என் வாழ்க்கைய கட்டமைச்சுக்குட்டன். 

சித்தர் மனப்பான்மையோட தான் என் வாழ்க்கை இருந்திருக்கு. பிடிச்சு, பிடிக்காத மாதிரி தான் ஒரு வாழ்க்கை. பாட்டு எழுத உக்காந்துட்டனா அதான் எல்லாமே எனக்கு. நான் இவ்வளோ தாமதமா வெளில தெரிறதுக்கு நான் தான் ஒரே காரணம். 

இப்போ நீங்க கவனிக்கப்படறதுக்கு முன்னாடியே, மறைந்த நா.முத்துக்குமார் உங்கள கவனிச்சி பாராட்டிருக்காரு. அவர் இல்லாத மனநிலை உங்களுக்கு எப்படி இருக்கு? 

நான் ரொம்ப இழந்திருக்கன் அப்டினா, அது நா.முத்துக்குமார் தான். பாலு மகேந்திரா அப்பா, நா.முத்துக்குமார் அண்ணன் இரண்டு பேரையும் ரொம்ப இழந்திருக்கன். அறிவுமதி அண்ணன், நா.மு அண்ணன், பாலு மகேந்திரா அப்பா மூனு பேரும் இல்லனா இப்போ எனக்கு கிடைச்சிருக்க இந்த அறிமுகம் கூட எனக்கு கிடைச்சிருக்காது. எனக்கு அவுங்க நிறைய பன்னிருக்காங்க. 

குறிப்பா, நா.முத்துக்குமார் கிட்ட “நீங்க வளர்ந்த பாடலாசிரியர் ஆகிட்டிங்க. உங்களுக்கு அடுத்த தலைமுறைல சிறந்த ஒருத்தர் வருவாருனா நீங்க யார சொல்லுவீங்கனு ஒரு முறை விஜய் டீவில கோபிநாத் கேட்டப்போ, வென்னிலா கபடி குழு படத்தில் நான் எழுதியிருந்த “கொடியில் காயும் கோவணம் கூட வானவில்லா தெரியுதே”, “வரைஞ்சு வச்ச மீன போல நின்னபடி நின்னபடி சுத்துரனே” இந்த இரண்டு வரியையும் குறிப்பிட்டு சொல்லி ‘கார்த்திக் நேத்தா’ அப்டினு சொல்லிட்டு போனாரு. அதுல கொஞ்சம் அறிமுகம் கிடைச்சுது. 

netha

சினிமா துறையில நீங்க சந்திச்ச போராட்டம்னு எதாவது இருக்கா? 

எனக்கு வெளிய எந்த போராட்டமும் பெருசா இல்ல. ஊருல இருந்து பணம் காசு அனுப்பி விட்ருவாங்க. படிக்கிறதுக்கு கன்னிமரா மாதிரி நிறைய நூலகங்கள் இருக்கு. என்னோட குணக்கோளாறு தான் எனக்கு பிரச்னை. அதனாலைய நான் நிறைய தனிமைப் படுத்தப்பட்டன். என்னோட உள் மனப் போராட்டம் தான் எனக்கு பெரிய போராட்டம். நான் ஏன் இப்படி இருக்கன். ஏன் மாறனும்? ஏன் மாறக்கூடாது? அப்படிங்குற முரண்பாடுகள் எனக்குள்ள நிறைய இருக்கு. 

பேட்டி தொடரும்…

நம் டாப் தமிழ் நியூஸ் யூடியூப் தளத்தில் வெளியாகியிருக்கும் முழு பேட்டி: