போதையில் ஷாப்பிங் மாலுக்கு இளைஞன்.. சிதறி ஓடிய மக்கள்..!

 

போதையில் ஷாப்பிங் மாலுக்கு இளைஞன்.. சிதறி ஓடிய மக்கள்..!

உச்சகட்ட போதையில் நிலைதடுமாறி ஓட்டி வந்த காரை ஷாப்பிங் மாலுக்குள் இளைஞன் ஒருவன் விட்டுள்ளான். மக்கள் சிதறி ஓடியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

உச்சகட்ட போதையில் நிலைதடுமாறி ஓட்டி வந்த காரை ஷாப்பிங் மாலுக்குள் இளைஞன் ஒருவன் விட்டுள்ளான். மக்கள் சிதறி ஓடியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பகுதியிலுள்ள உட்பீல்ட் எனும் ஷாப்பிங் மாலுக்குள், நேற்று மதியம் சுமார் 2 மணி அளவில் கருப்பு நிற கார் ஒன்று தாறுமாறாக உள்ளே நுழைந்து அங்கிருந்த பொருட்களை சேதமாக்கியது. இதனால் பதட்டம் அடைந்த மக்கள் அங்கும் இங்குமாக சிதறி ஓடினர். 

car

இதுகுறித்து ஷாப்பிங் மால் மேலாளர் அருகிலிருந்த காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். துவக்கத்தில் காரில் வெடிகுண்டு இருக்கலாம் என்றும், பொதுமக்கள் கூடியிருக்கும் இடத்தில் வெடிக்கச் செய்யவே இதுபோன்ற சதித் திட்டம் தீட்டப்பட்டு இருக்கிறது என்றும் பலரும் கருதினர். இன்னும் சிலர் அங்கு இருந்த கண்ணாடி பொருட்கள் திடீரென உடைந்ததால், துப்பாக்கிச்சூடு ஏதேனும் நடந்திருக்கக் கூடும் என கண்ணை மூடிக்கொண்டு வெளியே சிதறி ஓடினர். 

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காரின் அருகே சென்று பார்க்கையில், உள்ளே மயங்கிய நிலையில் 22 வயது இளைஞன் ஒருவன் இருந்ததை கண்டனர். உடனடியாக அவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து, பின்னர் தீவிரமாக விசாரித்ததில், இதன் பின்னணியில் எந்தவித தீவிரவாத அமைப்பும் இல்லை. சாதாரணமாக நிலை தடுமாறி கார் உள்ளே வந்துள்ளது. ஓட்டிவந்த இளைஞன் உச்சகட்ட போதையில் இருந்ததாக கூறப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தினால் ஷாப்பிங் மால் மற்றும் அதைச் சுற்றியிருந்த பகுதிகளில் சில மணி நேரங்கள் பதட்டம் நிலவியது. நிலை தடுமாறி வந்த காரை புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்த சிலர் அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். இந்த வீடியோ தற்போது வரை இணையதளங்களில் வைரலாகி வருகிறது.