போதையில் மருத்துவமனையில் படுத்து தூங்கிய டாக்டர்: நோயாளிகள் அவதி: அதிர்ச்சி தரும் சம்பவம்!

 

போதையில் மருத்துவமனையில் படுத்து தூங்கிய டாக்டர்: நோயாளிகள் அவதி: அதிர்ச்சி தரும் சம்பவம்!

குடிபோதையில் பணிக்கு வந்ததோடு, நோயாளிக்கு சிகிச்சை அளிக்காமல் படுத்து உறங்கிய அரசு மருத்துவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

திருவையாறு : குடிபோதையில் பணிக்கு வந்ததோடு, நோயாளிக்கு சிகிச்சை அளிக்காமல் படுத்து உறங்கிய அரசு மருத்துவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சை மாவட்டம், திருவையாறு அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணி செய்து வந்தவர் மகபூப் பாட்ஷா.தீபாவளி அன்று நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க  மகபூப் பாட்ஷாவுக்கு இரவு பணி வழங்கப்பட்டிருந்தது. இதையடுத்து இரவு பணிக்கு வந்த மகபூப் பாட்ஷா போதையில் இருந்ததாகவும், ஒரு நோயாளிக்கு கூட சிகிச்சை அளிக்காமல், தனது ஓய்வறையில் சென்று கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு படுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே விஷம் அருந்திய நிலையில் வந்த ஒருவருக்கு சிகிச்சைக்கு அனுமதிக்கும் ஏ.ஆர்.பதிவு போடுவதற்கு மருத்துவரின் கையெழுத்து அவசியம் என்பதால் அவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு எழுப்ப முயன்றுள்ளார் செவிலியரையே கையெழுத்துப் போடா கூறியுள்ளார். அதே போல விபத்தில் காயமடைந்தவருக்கும் சிகிச்சை அளிக்க மருத்துவர் மகபூப் பாஷா எழுந்து வராததால் அந்த நோயாளியும் வேறு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளார்.

பணி நேரத்தில் மது போதையில் படுத்து உறங்கியதாகப் புகார் எழுந்ததால், மருத்துவர் மகபூப் பாஷா மீது துறை ரீதியான விசாரணை நடந்து வரும் நிலையில் அவர் போதையில் பணிக்கு வந்தது உறுதி செய்யப்பட்டதால் அவரை திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.