போதையில் போலீசை கலாய்த்த குடிமகன்கள் ! சிறப்பாக கவனிக்கப்பட்டு சிறையில் அடைப்பு !

 

போதையில் போலீசை கலாய்த்த குடிமகன்கள் ! சிறப்பாக கவனிக்கப்பட்டு சிறையில் அடைப்பு !

விழுப்புரம் மாவட்டத்தில் குடிபோதையில் போலீசுக்கு சவால் விடுத்தும், அஜித்தை விமர்சித்தும் பேசிய 2 இளைஞர்களை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் உமையன்புரம் கிராமத்தை சேர்ந்த வீரன் மற்றும் சரத்குமார் இருவரும் விஜய் ரசிகர்கள். அளவுக்கு மீறி மதுபானம் குடித்து விட்டு நிதானத்தை இழந்த இவர்கள் பேஸ்புக்கில் தமிழக காவல்துறையை ஆபாசமாக பேசி முகநூலில் பதிவிட்டுள்ளனர். மேலும் அஜித்தையும், அஜீத் ரசிகர்களையும் தவறாக பேசி அந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர். 

fans

அப்படி பேசியது மட்டும் அல்லாமல் அவர்கள் காவல்துறைக்கு ஒரு உதவி செய்துள்ளனர். அது என்னவென்றால் அவர்கள் யார், எங்கு இருக்கிறார்கள் என காவல்துறை அலையக்கூடாது என்பதற்காக குடிபோதையில் தங்கள் பெயர் முகவரியை எல்லாம் தெள்ள தெளிவாக குறிபிட்டு வீடியோவில் பேசி உள்ளனர். 

இந்த மிரட்டல் வீடியோ அஜித் ரசிகர்களுக்கு தெரிந்தால் தேவையற்ற அசம்பாவிதம் நடக்கும் என கருதிய காவல்துறை உடனடியாக அவர்களை பிடித்து காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். போதை தெளிந்தவுடன் காவல்துறை தனக்கே உரிய பாணியில் விசாரித்தபோது குடிபோதையில் என்ன பேசுவது என தெரியாமல் பேசிவிட்டதாக அழுது புலம்பினர். இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

ஒரு சினிமாவில் சத்யராஜூம், கவுண்டமணியின் காவல்துறை வாகனத்தை வழிமறித்து காவல்துறையை கண்டபடி பேசுவர். குடிபோதையில் இருந்த அவர்களை காவல்நிலையம் அழைத்து செல்லும் போலீஸ் கவுண்டமனியை சிறப்பாக கவனிப்பர். பின்னர் கவுண்டமனி அழுது கொண்டே இருக்கும் காட்சி வரும். அதுபோல்தான் இந்த இளைஞர்களும் தேவையில்லாமல் பேசி மாட்டிக் கொண்டனர். 

அது சரி போதையில் என்ன பேசுகிறோம் என தெரியாமல் பேசிவிட்டதாக கூறும் இவர்கள் முகவரி மட்டும் சரியாக சொல்கிறார்கள் என்பதுதான் அனைவரின் கேள்வி.