போதையில் கார் ஓட்டி சர்ச்சையில் சிக்கும் நடிகர்கள்: அதிர்ச்சி தரும் தொடர்கதைகள்!

 

போதையில் கார் ஓட்டி சர்ச்சையில் சிக்கும் நடிகர்கள்: அதிர்ச்சி தரும் தொடர்கதைகள்!

நடிகர்கள் போதையில்கார் ஓட்டுவதும், அவர்களை போலீசார் கைது செய்து பின்னர் பிணையில் விடுவிப்பதும் வழக்கமாகி வருகின்றன.

சென்னை: நடிகர்கள் போதையில்கார் ஓட்டுவதும், அவர்களை போலீசார் கைது செய்து பின்னர் பிணையில் விடுவிப்பதும் வழக்கமாகி வருகின்றன.

நடிகர்கள் திரையில் மட்டுமல்லாது நிஜவாழ்க்கையிலும் ஹீரோ, ஹீரோயினாகவே வாழ்ந்து வருகின்றனர். ஆனால் நடிகர்களோ சுய ஒழுக்கத்தை  மறந்து ரசிகர்கள் மத்தியில் அவப்பெயரைச் சம்பாதித்து வருவது வாடிக்கையாகி வருகின்றது. அப்படி குடிபோதையில் நடிகர்கள் பலர் வாகனம் ஓட்டி சர்ச்சையில் சிக்கி வருகின்றனர்.

arunvijay

கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி நடிகை ராதிகா மகளின் திருமண வரவேற்பில் கலந்து கொண்ட நடிகர் அருண் விஜய் சென்னை நுங்கம்பாக்கம் அருகே மதுபோதையில் கார் ஓட்டிச் சென்று காவல்துறை வாகனம் மீது மோதிவிட்டுத் தலைமறைவானார். அதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டு சொந்த  ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்

 

jai

நடிகர் ஜெய், தனது ஆடி காரை மதுபோதையில் தாறுமாறாக ஓட்டி, சென்னை அடையாறு பாலத்தின் மேல் மோதினார். இந்தச் சம்பவம் தொடர்பாகப் பதியப்பட்ட வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடந்தது. நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜெய் காவல்துறையிடம் சரணடைந்தார். பின் அவரின் ஓட்டுநர் உரிமம் 6 மாதங்களுக்கு ரத்து செய்யப்பட்டது. 

manoj

இயக்குநர் பாராதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் மது போதையில் தனது பி.எம்.டபிள்யூ. காரை தாறுமாறாக ஓட்டியதால்  நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் அவரை மடக்கிபிடித்த காவலர்கள், மனோஜுக்கு அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பினர்

gayathri

இதை தொடர்ந்து  நடன இயக்குநரும், நடிகையுமான காயத்ரி ரகுராம். மதுபோதையில் கார் ஓட்டிச் சென்றபோது அடையாறு அருகே  அவரை தடுத்து நிறுத்திய காவலர்கள், அபராதம் விதித்தனர். ஆனால் இந்தக் குற்றச்சாட்டுக்கு காயத்ரி ரகுராம் மறுப்பு தெரிவித்தார்.

sakthi

சமீபத்தில் இயக்குநர் பி.வாசுவின் மகனும், நடிகருமான சக்தி, மதுபோதையில் சூளைமேடு பகுதியில் வாகனம் ஓட்டியதாகக் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை போலீசார் ஜாமீனில் விடுவித்தனர். இது குறித்து நடிகர் சக்தி மன்னிப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது.