போதைப் பொருள் இல்லாத தென்னிந்தியாவை உருவாக்க ஒத்துழையுங்கள் : டிஜிபி திரிபாதி

 

போதைப் பொருள் இல்லாத தென்னிந்தியாவை உருவாக்க ஒத்துழையுங்கள் : டிஜிபி திரிபாதி

போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவிற்கான தென்னிந்தியா பிராந்தியங்களுக்கான ஒருங்கிணைப்பு கலந்தாய்வுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.

தமிழகத்தில் போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விநியோகம் அதிகரித்து வருகிறது. தினந்தோறும் ஆங்காங்கே போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. முக்கியமாக, போதைப் பொருட்களின் தாக்கம் கல்லூரி மாணவர்களிடையே அதிகரித்துக் காணப்படுகிறது.

drug

போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவிற்கான தென்னிந்தியா பிராந்தியங்களுக்கான ஒருங்கிணைப்பு கலந்தாய்வுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா, அந்தமான் நிக்கோபார் தீவுகள், புதுச்சேரி மற்றும் கர்நாடகா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.     

dgp

அந்த கூட்டத்தில் பேசிய தமிழக சட்ட ஒழுங்கு டிஜிபி திரிபாதி, போதைப்பொருள் கட்டுப்பாடு மற்றும் கடத்தலைத் தடுக்கும் நடவடிக்கைகளை அனைத்து மாநிலங்களும் மேற்கொள்ள வேண்டும். இந்த போதைப் பொருள் சீர்கேட்டில் இருந்து நமது இளம் தலைமுறையினரைக் காப்பாற்ற வேண்டியது நமது கடமை என்று உணர்ந்து பணியாற்றுங்கள். அனைத்து மாநிலங்களிலும் உள்ள போதைப் பொருள் நுண்ணறிவு அதிகாரிகள் ஒருங்கிணைந்து போதைப் பொருள் இல்லாத தென் இந்தியாவை உருவாக்க ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.