‘போதும் மச்சா நல்லா இரு’ :சாக்ஷியை கையெடுத்து கும்பிட்ட கவின்

 

‘போதும் மச்சா நல்லா இரு’ :சாக்ஷியை கையெடுத்து கும்பிட்ட கவின்

பிக் பாஸ் சீசன் 3யின் இன்றைய நிகழ்ச்சிக்கான  மூன்றாவது புரொமோ வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் சீசன் 3யின் இன்றைய நிகழ்ச்சிக்கான  மூன்றாவது புரொமோ வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் சீசன் 3 மற்ற இரண்டு சீசன்களை  விட சுவாரஸ்யமாகச் சென்று கொண்டிருக்கிறது. காதல், சண்டை, அழுகை. ஏமாற்றம் என அனைத்தும் உள்ளது.  குறிப்பாக கடந்த இரண்டு வாரங்களாகச் சென்று கொண்டிருந்த சஷி – கவின் காதல் போர் ஒரு முடிவை எட்டியுள்ளது. அது ஏற்கனவே இன்று வெளியான இரண்டு புரோமோக்கள் மூலம் தெளிவானது. 

 

இந்நிலையில்  இன்றைய நிகழ்ச்சிக்கான  மூன்றாவது புரொமோ வெளியாகியுள்ளது. அதில், கவின் ஹவுஸ்மேட்ஸ் முன்னிலையில், ‘எல்லாத்துக்கும் காரணம் நான் தானா? என்று சாக்ஷி  கேட்க, போதும் மச்சான், இப்பவும் சொல்றேன் நீ நல்லா இரு. இதுக்கு மேலேயும்  நான் யாரையும் குற்றம் சொல்ல வேணாம். எல்லா பழியை வேணும்னாலும் நான் எடுத்துக்குறேன் அதனால இந்த வாரம் நான் சேவ் ஆகிட்டா கூட நீங்க அடுத்த வாரம் என்ன நாமினேட் பண்ணி அனுப்பிடுங்க. இது என்னதான் சரிபண்ண பார்த்தாலும் என்னால பிரச்னை வரும். ரெண்டு பேரு என்ன வேற மாதிரி பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. இதுக்கு மேல என்னால இங்க இருக்க முடியாது. அதுக்கு என்ன அனுப்பி விட்டுடுங்க. இல்ல அதுக்கு ஏதாவது பண்ணனும்னா கூட சொல்லுங்க நான் செய்றேன்’ என்று சொல்வது போல புரொமோ  முடிகிறது.

kavin

இன்று வெளியான மூன்று புரொமோ  வீடியோக்களும் கவின் – சாக்ஷி – லாஸ்லியா மூவரின் முக்கோண காதலை தான் வெளிப்படுத்தியுள்ளது. இதனால் பிக் பாஸ் கன்டென்ட் இல்லாமல் திணறுகிறார் என்பது தெளிவாக தெரியுது மக்களே…!