போட்டோஷாப்பில் இவாங்காவுடன் குடும்பம் நடத்திய இளைஞர்களுக்கு இவான்காவின் அசத்தல் பதில்

போட்டோஷாப்பில் இவாங்காவுடன் குடும்பம் நடத்திய இளைஞர்களுக்கு இவான்காவின் அசத்தல் பதில்

இவான்கா தாஜ்மகாலுக்கு அவரது கணவருடன் வந்திருந்தார். அப்போது அவர் தாஜ்மஹால் முன்பு அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு தாஜ்மஹால் மிக அழகான இடம் என்றும், இந்தியா வந்தது தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்ததாகவும் கூறியிருந்தார். 

கடந்த வாரம் முழுவதும் ட்ரம்பின் இந்தியா வருகை தான் ஹாட் டாபிக். அதிபர் டொனால்ட் டிரம்ப், மனைவி மெலனியா டிரம்ப் மற்றும் மகள் இவான்கா டிரம்ப் மற்றும் இவன்காவின் கணவரும் இந்தியாவிற்கு வருகை தந்தனர்.

இவான்கா தாஜ்மகாலுக்கு அவரது கணவருடன் வந்திருந்தார். அப்போது அவர் தாஜ்மஹால் முன்பு அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு தாஜ்மஹால் மிக அழகான இடம் என்றும், இந்தியா வந்தது தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்ததாகவும் கூறியிருந்தார். 

ivanka-trump-01

இந்நிலையில், பாடகர் தில்ஜீத் டோசஞ் தான் இவன்காவின் மடியில் படுத்திருப்பது போல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார். இந்த புகைப்படம் வைரலாகியது.அதில் “என் வாழ்க்கைக்குப் பிறகு தாஜ்மஹால் கட்டச் சொன்னாள். எனவே நான் அவளை அழைத்துச் சென்றேன், வேறு என்ன செய்ய முடியும்” என்று தலைப்பிட்டிருந்தார். 

இதைப் பார்த்த இவான்கா “கண்கவர் தாஜ்மஹால் என்னை அழைத்துச் சென்றதற்கு நன்றி, ililjitdosanjh! நான் மறக்க முடியாத ஒரு அனுபவம் அது!” என்று நகைச்சுவையாக பதிலளித்திருந்தார். அவரின் இந்த பதில் பலரையும் கவர்ந்தது.

மேலும் சில இணையவாசிகள் இவங்காவுடன் போட்டோசாப் செய்து புகைப்படங்கள் வெளியிட்டனர் . இதற்கும் பதிலளித்த இவாங்கா “இந்திய மக்களின் அரவணைப்பை நான் பாராட்டுகிறேன். … நான் பல புதிய நண்பர்களை உருவாக்கியிருக்கிறேன்” என்று பதிலளித்திருந்தார்.  இவான்காவின் இந்த செயல் பலரது மத்தியில் பாராட்டப்பட்டு வருகிறது.