போட்டி போட்டு சோப்பு விலையை குறைக்கும் முன்னணி நிறுவனங்கள்……..

 

போட்டி போட்டு சோப்பு விலையை குறைக்கும் முன்னணி நிறுவனங்கள்……..

விற்பனையை அதிகரிக்கும் நோக்கில், இந்துஸ்தான் யூனிலீவர் உள்பட முன்னணி நுகா்பொருள் துறையை சேர்ந்த நிறுவனங்கள் போட்டி போட்டு சோப்பு விலையை குறைக்க தொடங்கி உள்ளன.

பொருளாதார மந்த நிலை, வேலை வாய்ப்பு குறைந்தது போன்ற காரணங்களால் மக்களிடம் பணப் புழக்கம் குறைந்து விட்டது. இதனால் நுகா்பொருட்கள் முதல் வாகனம் வரை அனைத்து துறைகளிலும் விற்பனை குறைந்து விட்டது. இதனால் விற்பனையை அதிகரிக்க பல்வேறு நிறுவனங்கள் அதிரடி சலுகைகளை அறிவித்து வருகின்றன.

சந்தூர் சோப்பு

இந்நிலையில் இந்துஸ்தான் யூனிலீவர், விப்ரோ போன்ற முன்னணி நுகர்பொருள் நிறுவனங்கள் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் சோப்புகளின் விலையை குறைத்து வருகின்றன. சோப்பு தயாரிக்க தேவைப்படும் பாமாயில் உள்பட மூலப்பொருட்களின் விலையும் தற்போது குறைந்துள்ளதால் அதன் பலனை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் நோக்கில் சோப்பு விலையை நிறுவனங்கள் குறைக்க தொடங்கியுள்ளன.

இது தொடர்பாக இந்துஸ்தான் யூனிலீவர் கூறுகையில், நாங்கள் லக்ஸ் மற்றும் லைபாய் சோப்புகளின் விலையை 4 முதல் 6 சதவீதம் வரை குறைத்துள்ளோம். அது சில பேக்குகளில் அதிகமாக இருக்கலாம். பலனை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் நோக்கில் விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தது.

விப்ரோ

சந்தூர் சோப்புக்களை தயாரிக்கும் விப்ரோ கன்ஸ்யூமர் நிறுவனம் இது குறித்து கூறுகையில்,  ஆமாம். நாங்களும் சோப்புகளின் விலை குறைத்துள்ளோம். மூலப்பொருட்களின் விலை குறைந்ததால் அதன் பலனை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்காக விலையை குறைத்துள்ளோம். இதனால் பயன்பாடு அதிகரிக்கும் என நாங்கள் நம்புகிறோம் என தெரிவித்தது.