‘போட்டியை மறந்து கலைகளில் திளைத்துவிட கூடாது’ : யாரை சொல்கிறார் கமல்?

 

‘போட்டியை மறந்து கலைகளில் திளைத்துவிட கூடாது’ : யாரை சொல்கிறார் கமல்?

பிக் பாஸ் 3 தமிழ்  நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரோமோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் 3 தமிழ்  நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரோமோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் தொடங்கி வெற்றிகரமாக இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இதுவரை  பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா, சாக்ஷி, அபிராமி, சரவணன் மற்றும் மதுமிதா ஆகியோர் வெளியேறியுள்ளனர். அதைத்தொடர்ந்து இந்த வாரம் நாமினேஷன் கிடையாது என்று கமல்ஹாசன் அறிவித்துள்ளார். 

 

இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான புரொமோ  வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் கமல் ஹாசன், ‘கலாச்சாரம் என்று நாம் மார்தட்டிக் கொள்கிறோமே அதில் இந்த கலைஞர்களும்  இவர்களின் கலைகளும் சேரும். மறதி பட்டியலில் இந்த கலைகளும் இங்கே வந்துவிடக் கூடாது என்பதற்காகத் தான் இவர்களை இங்கே தருவித்தோம். வீட்டுக்குள்ளே ஒரு போட்டியும் நடந்து கொண்டிருக்கிறது. அதை மறந்து அவர்கள் வெறும் கலையில்  மட்டுமே திளைத்து விட கூடாது  என்பதை ஞாபகப்படுத்துவோம்’  என்று அந்த வீடியோ முடிகிறது. 

கடந்த ஒருவாரமாக பிக் பாஸ் வீட்டுக்குள் கிராமிய சூழல், வில்லுப்பாட்டு, தெருக்கூத்து போன்றவை டாஸ்க்காக கொடுக்கப்பட்டு வந்தது இன்றுடன் முடிகிறது என்பது  குறிப்பிடத்தக்கது.