போடுறா வெடிய… வெளியானது பிகில் எமோஜி! 

 

போடுறா வெடிய… வெளியானது பிகில் எமோஜி! 

விஜய்- அட்லி கூட்டணியில் உருவாகி இருக்கும் பிகில் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாவதையடுத்து பிகில் படத்துக்கான எமோஜினை ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

விஜய்- அட்லி கூட்டணியில் உருவாகி இருக்கும் பிகில் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாவதையடுத்து பிகில் படத்துக்கான எமோஜினை ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

Bigil

நடிகர் விஜய் – இயக்குநர்  அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் இப்படத்தைத் தயாரித்துள்ள இப்படம் தீபாவளியை முன்னிட்டு 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் விஜய்க்கு  ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர் விவேக், யோகிபாபு, மனோபாலா, டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடியுள்ளது. 

 

 

இந்நிலையில் #Bigil, #வெறித்தனம், #BigilDiwali, #PodraVediya, #தளபதி63 ஆகிய நான்கு ஹேஷ்டேக்குகளுக்கு ட்விட்டர் நிறுவனம் விஜயின் உருவம் பொறித்த எமோஜியை வெளியிட்டுள்ளது. இந்த எமோஜியில் நடிகர் விஜய் கையில் கால்பந்துடன், மாஸ் காட்டுகிறார். இதனை ரசிகர்கள் ட்விட்டரில் பகிர்ந்து ட்ரெண்டாக்கி வருகின்றனர். ஏற்கெனவே விஜய்யின் ‘மெர்சல்’, ரஜினிகாந்தின் ‘காலா’, சமீபத்தில் பிரபாஸின் ‘சாஹோ’ ஆகிய படங்களுக்கான எமோஜி வெளியிடப்பட்டது குறிப்பிடதக்கது.