போடுறா வெடிய… தோட்டக்கலைத்துறை சார்பில் பட்டாசு விதைச் செடிகள்!

 

போடுறா வெடிய… தோட்டக்கலைத்துறை சார்பில் பட்டாசு விதைச் செடிகள்!

தீபாவளி பண்டிகையையொட்டி தோட்டக்கலைத்துறை சார்பில் விதைச் செடிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 

தீபாவளி பண்டிகையையொட்டி தோட்டக்கலைத்துறை சார்பில் விதைச் செடிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 

தீபாவளி என்றாலே புத்தாடைகள், விதவிதமான பலகாரங்கள், பட்டாசுகள்… இவையே நியாபகத்துக்கு வரும். ஆனால் இந்த ஆண்டு புதுவிதமாக தோட்டக்கலைத்துறை சார்பில் விதை வெடிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

vedi

மரம் வளர்ப்பது குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவே இத்தகைய புதுமுயற்சியை கையிலெடுத்துள்ளதாக தோட்டக்கலை துறை நிர்வாகி அவினாஷ் தெரிவித்துள்ளார். அதன்படி லஷ்மி வெடி, புஸ்வானம், சங்குசக்கரம், கம்பிமத்தாப்பு, அனுகுண்டு போன்ற பட்டாசுகள் போல் களிமண்ணால் வடிவமைத்து அதில் விதைகள் புதைக்கப்பட்டுள்ளன. ஆனா என்ன இந்த வெடிய வெடிக்க முடியாது மாறாக தண்ணீர் ஊற்றி வளர்க்கலாம். வீட்டிலுள்ள தொட்டியிலோ, தோட்டத்திலோ மரமாக வளர்க்கலாம். இந்த வெடி செடி 5 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விதை வெடிகள் திருவான்மியூர், அண்ணாநகர், மாதாவரம் தோட்டக்கலை பண்ணையிலும், தேனாம்பேட்டை செம்மொழி பூங்காவிலும் நாளை முதல் விற்பனைக்கு வரவுள்ளது.