போடுறா வெடியா? அக். 12 இல் வெளியாகிறது பிகில் டீசர்!

 

போடுறா வெடியா? அக். 12 இல் வெளியாகிறது பிகில் டீசர்!

வரும் 12 ஆம் தேதி பிகில் டீசர்  வெளியாகும் என்று தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் – அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள மூன்றாவது திரைப்படம் பிகில். இப்படத்தில் விஜய் அப்பா – மகன் என இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர் விவேக், யோகிபாபு, மனோபாலா, டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். 

BIGIL

ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் இப்படத்தைத் தயாரித்துள்ளது. இப்படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், சமீபத்தில் பிரம்மாண்டமாக இசை வெளியீட்டு விழா சென்னை தாம்பரம் சாய் ராம் பொறியில் கல்லூரியில் நடைபெற்றது.  இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இப்படத்தின் டீசர் இன்னும் வெளியாகததால் ரசிகர்கள் அதிருப்தியடைந்தனர். 

இந்நிலையில் பிகில்  திரைப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி,  ‘பிகில் படத்தின் டீசர் வரும் 12 ஆம் தேதி வெளியாகும் என’ என தெரிவித்துள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.