போக்குவரத்து விதிமீறல்களை தடுக்க இ- சலான் கருவி  அறிமுகம்! 

 

போக்குவரத்து விதிமீறல்களை தடுக்க இ- சலான் கருவி  அறிமுகம்! 

போக்குவரத்து விதி மீதி மீறல்களை தீவிரமாக கண்காணிக்கவும், குற்றங்களைத் தடுக்கவும், இ – சலான் கருவி கோவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

போக்குவரத்து விதி மீதி மீறல்களை தீவிரமாக கண்காணிக்கவும், குற்றங்களைத் தடுக்கவும், இ – சலான் கருவி கோவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

கோயம்புத்தூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று டிஐஜி கார்த்திகேயன் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் ஆகியோர் இணைந்து இ- சலான் கருவிகளை வழங்கினர்.




அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய டிஐஜி கார்த்திகேயன், “கோவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா தொடர்பாக  போராட்டங்கள் நடைபெறுவதால் , அசம்பாவிதங்களை தடுக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது கடந்த ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தக் கருவிகளினால் சுமார் 66 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் போக்குவரத்து சட்ட விதி மீறல்கள் குறைந்துள்ளன. எனவே அதன் அடுத்தகட்டமாக இன்று 112 காவல் நிலையங்களுக்கும் இந்த கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஜனவரி முதல் போக்குவரத்து விதி மீதி மீறல்களை தீவிரமாக கண்காணிக்க முடியும்.” எனக்கூறினார். 

e challan

போக்குவரத்து விதிமீறல்களுக்கு, நேரடியாக ரொக்கமாக அபராதம் வசூலிக்காமல் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு மூலமாக, ‘இ-சலான் கருவியை பயன்படுத்தி, அபராதம் வசூலிக்கப்படுகிறது. மேலும் இந்தியாவில் எங்கு போலீசில் சிக்கினாலும் இந்த இ- சலான் மூலம் இவரது குற்றங்களை போலீசார் எளிதாக கண்டுபிடித்துவிடலாம்.