போக்குவரத்து விதிமீறல்: லாரி உரிமையாளருக்கு 1 லட்சத்து 41 ஆயிரம் அபராதம்!

 

போக்குவரத்து விதிமீறல்: லாரி உரிமையாளருக்கு 1 லட்சத்து 41 ஆயிரம் அபராதம்!

புதிய மோட்டார் வாகன சட்டம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் : சாலை விதிகளை மீறிய   லாரி ஓட்டுநரிடம்  ஒரு லட்சத்து 41 ஆயிரம் ரூபாயை போலீசார் அபராதமாக விதித்துள்ளனர். 

போக்குவரத்து விதிமீறல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், புதிய மோட்டார் வாகன சட்டம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தின் படி அபராத தொகையானது 10 மடங்கு அதிகரித்துள்ளது.

truck

இந்நிலையில் ராஜஸ்தானில் சாலை விதிகளை மீறிய   லாரி ஓட்டுநரிடம்  ஒரு லட்சத்து 41 ஆயிரம் ரூபாயை போலீசார் அபராதமாக விதித்துள்ளனர்.  அதிக எடையை ஏற்றிச்சென்றதற்காக ரூ.1 லட்சம் அபராதமும், மற்ற விதி மீறலுக்காக 41 ஆயிரமும் அபராதமாக லாரி உரிமையாளர் பகவான் ராம் என்பவரிடமிருந்து வசூலிக்கப்பட்டது. இதற்கான ரசீது தற்போது சமூக வலைதளங்களில்  வைரலாகி வருகிறது. 

முன்னதாக சில தினங்களுக்கு முன்பு ஒடிசாவில் லாரி ஓட்டுநர் ஒருவருக்கு ரூ.80 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.