போக்குவரத்து போலீசின் வருட வசூல் ரூ.48,000 கோடி! – என்.ஜி.ஓ அதிர்ச்சி தகவல்

போக்குவரத்து போலீசின் வருட வசூல் ரூ.48,000 கோடி! – என்.ஜி.ஓ அதிர்ச்சி தகவல்

தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் லாரிகளை நிறுத்தி போலீஸ் வசூல் செய்வது காலகாலமாக நடக்கும் ஒன்றாக மாறிவிட்டது. தமிழகத்தில் மட்டுமல்ல… இந்தியா முழுக்கவும் இதுதான் நிலைமை. ஒவ்வொரு லாரி டிரைவரும் கொடுக்கும் லஞ்சப் பணம் எவ்வளவு இருக்கும் என்று சேவ் லைஃப் அறக்கட்டளை ஓர் ஆய்வு நடத்தியது.

நாடு முழுவதும் போக்குவரத்துத் துறையினர் ஆண்டுக்கு ரூ.48 ஆயிரம் கோடி அளவுக்கு லஞ்சம் பெறுவதாக என்.ஜி.ஓ ஒன்று ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது.
தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் லாரிகளை நிறுத்தி போலீஸ் வசூல் செய்வது காலகாலமாக நடக்கும் ஒன்றாக மாறிவிட்டது. தமிழகத்தில் மட்டுமல்ல… இந்தியா முழுக்கவும் இதுதான் நிலைமை. ஒவ்வொரு லாரி டிரைவரும் கொடுக்கும் லஞ்சப் பணம் எவ்வளவு இருக்கும் என்று சேவ் லைஃப் அறக்கட்டளை ஓர் ஆய்வு நடத்தியது.

police-checks-lorry

இதற்காக அந்த நிறுவனம் நாடு முழுவதும் சுமார் 1200 லாரி ஓட்டுநர்கள் மற்றும் 110 லாரி உரிமையாளர்களிடம் கருத்துக் கணிப்பை நடத்தியது. அப்போது, 82 சதவிகிதம் பேர் போலீசாருக்கு லஞ்சம் கொடுப்பதை ஒப்புக்கொண்டனர். அவர்களிடம் ஒரு பயணத்துக்கு எவ்வளவு லஞ்சம் கொடுப்பீர்கள் என்று கேட்டுள்ளனர். அதன் அடிப்படையில் நாடு முழுவதும் ஓடும் லாரிகள் அடிப்படையில் கணக்கீடு செய்து பார்த்துள்ளனர். அப்போது, ரூ.48 ஆயிரம் கோடி வந்ததைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஒவ்வொரு ஆண்டும் லாரி ஓட்டுநர்கள் மட்டும் போக்குவரத்து போலீசாருக்கு ரூ.48 ஆயிரம் கோடி லஞ்சம் கொடுக்கிறார்கள் என்றால் இதர ஆம்னி பஸ்கள், மினி லாரி, ஆட்டோ, வாடகை கார், இருசக்கர வாகன ஓட்டுநர்களிடமிருந்து பெற்றதை எல்லாம் சேர்த்தால் எவ்வளவு வரும் என்று கணக்கிட்டால் தலை சுற்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.