போகியும் புத்தனும்… இந்திர வழிபாடு இருந்ததா..!?

 

போகியும் புத்தனும்… இந்திர வழிபாடு இருந்ததா..!?

வார்த்தை ஜாலங்களில் மயங்கும் தமிழர்கள் ‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல, கால வகையினானே…’ என்கிற நன்னூல் சூத்திரத்தை நினைத்தோ என்னவோ, வீட்டில் உள்ள பழம்பொருட்களை எரிப்பதை இதோடு பொருத்திப்பார்த்து ஏற்றுக்கொண்டு விட்டார்கள். ஆனால்,அந்த கழிக்கப்பட்ட பழையது எது? என்று சிந்திக்கவில்லை.

போகிப் பண்டிகையன்று பழையவற்றை கழித்து புதியவற்றை கொண்டுவருதல் என்று ஒரு வழக்காறு இதுக்கிறது இல்லையா, இதன் பின்னால் ஒரு சரித்திரச் சதியே இருக்கிறது!

வார்த்தை ஜாலங்களில் மயங்கும் தமிழர்கள் ‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல, கால வகையினானே…’ என்கிற நன்னூல் சூத்திரத்தை நினைத்தோ என்னவோ, வீட்டில் உள்ள பழம்பொருட்களை எரிப்பதை இதோடு பொருத்திப்பார்த்து ஏற்றுக்கொண்டு விட்டார்கள். ஆனால்,அந்த கழிக்கப்பட்ட பழையது எது? என்று சிந்திக்கவில்லை.

patti-pongal

இந்த போகி தினம் பிறந்தது தமிழகத்தில் அல்ல. பெரும் பொங்கல், வாசல் பொங்கல், மனைப்பொங்கல், மாட்டுப் பொங்கல், பட்டிப் பொங்கல் காணும் பொங்கல் என்று எல்லாம் தமிழ் சொற்களாக இருக்கையில், அதென்ன ‘  போகி’?.அதற்கு என்ன பொருள்? இந்தக் கேள்விக்கு இரண்டு பதில்கள் இருக்கின்றன. ஒன்று போகி அன்று பழையது போய் புதியன வருவதால் அதற்கு ‘ போக்கி’ என்று பெயர் இட்டிருந்தார்கள். அதுவே திரிந்து போகியாகி விட்டது என்பது முதல் பதில். இது பட்டிமன்ற வாதம், அல்லது வாட்ஸப் வாதம் போல் இருப்பதால் இதை உடனே நிராகரிக்கலாம். அடுத்தது கொஞ்சம் விவரமான வாதம்.

lord-indiran

போகி என்பது இந்திரனின் பெயர்களுள் ஒன்று,  இந்த திருவிழா அவன் பெயரால் கொண்டாடப்படுகிறது என்பது அடுத்த வாதம். இதில் இந்திரன் என்பது தமிழர் வணங்கிய தெய்வம். இந்திரன் என்பவன் மேகங்களை ஆள்பவன். மழையும் , சூரியனும்தான் வேளாண்மைக்கு ஆதாரமானவை. அதனால் சூரியனை வழிபட்டு பொங்கலிடுவதற்கு முதல்நாள் இந்திரனை வழிபட்டார்கள் என்று சொல்லும் போது நம்பக்கூடிய வாதமாகவே தெரிகிறது. ஆனால் இதுவும் உண்மையல்ல. இதற்கு விடை கெளதம புத்தர் சாகும்போது சொன்ன கடைசி சொற்களில் இருக்கிறது.

தெரிந்தோ சதியாலோ கெட்டுப்போன பன்றி கறியை தின்று சாகும் தருவாயில் புத்தன் தன் சீடர்களிடம் ‘ வயா தாம்மா ஷங்கர’ என்று பாலி மொழியில் சொன்னான்.உருவானதெல்லாம் (composite) எல்லாம் ஒருநாள் அழியும் என்று இதை தமிழில் சொல்லலாம். அந்த கடைசி வார்த்தை ஷங்கர வை கவனியுங்கள்,அதற்கு அழியும் என்று பொருள்.( அழிக்கும் கடவுள் சங்கரன்) இன்றைய தினத்தில் துவங்கி ஆந்திரா முதல் வடஇந்தியா முழுவதும் நடக்கும் திருவிழாவின் பெயர் சங்கராந்தி!

எப்படி மகாவீரர் இறந்த தினம் தீபாவளி ஆனதோ அதுபோலவே சனாதன மதங்கள் தலையெடுத்தபோது புத்தனின் மரணம் சங்கராந்தி ஆகிவிட்டது.தென்தமிழகத்தில் இருப்பவர்கள் உங்கள் தாத்தா பாட்டிகளிடம் கேளுங்கள்,போகியன்று ஒப்பாரி பாடும் வழக்கம் முன்பு இருந்திருக்கிறது.