போகிப் பண்டிகைக்கு பிளாஸ்டிக் பொருட்களை எரிக்கக் கூடாது.. அமைச்சர் கே.சி.கருப்பணன் எச்சரிக்கை!

 

போகிப் பண்டிகைக்கு பிளாஸ்டிக் பொருட்களை எரிக்கக் கூடாது.. அமைச்சர் கே.சி.கருப்பணன் எச்சரிக்கை!

பொங்கல் பண்டிகை வருவதற்கு இன்னும் சில நாட்களே  உள்ள நிலையில், மக்கள் பண்டிகையைக் கொண்டாடத் தயாராகி வருகின்றனர்.

பொங்கல் பண்டிகை வருவதற்கு இன்னும் சில நாட்களே  உள்ள நிலையில், மக்கள் பண்டிகையைக் கொண்டாடத் தயாராகி வருகின்றனர். பொங்கலுக்கு முன் தினம், ” பழையன கழிதலும், புதியன புகுதலும்” என்ற நோக்கோடு போகிப் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகின்றது. போகிக் கொளுத்துவது நன்மை என்றாலுமே, மக்கள் பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களைக் கொளுத்துவதால் காற்று மாசுபாடு ஏற்படுகிறது. 

ttn

போகிப் பண்டிகையை முன்னிட்டு சென்னை கிண்டியில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், போகிக் கொளுத்தும் போது கடைப்பிடிக்க வேண்டிய  விதிமுறைகள் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரத்தின் தொடக்க விழா நடைபெற்றது. அதில் அமைச்சர்  கே.சி.கருப்பணன் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை மக்கள் எரிக்கிறார்களா என்பதைக் கண்காணிக்கச் சிறப்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபடுவர் என்றும் தெரிவித்துள்ளார். அதனையடுத்து , அமைச்சர் கருப்பணன் விழிப்புணர்வு வாகனங்களைக் கொடியசைத்துத் துவக்கி வைத்தார். 

ttn

அந்த நிகழ்ச்சி முடிந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், போகிக் கொளுத்தும் போது பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை எரித்து சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.