பொழுதுக்கும் ஜீன்ஸ் அணிபவராக நீங்கள்? உசுருக்கு உத்தரவாதம் இல்லை !

 

பொழுதுக்கும் ஜீன்ஸ் அணிபவராக நீங்கள்? உசுருக்கு உத்தரவாதம் இல்லை !

மானத்தை காக்கும் ஆடை உயிரையும் குடிக்கும் என்பதற்கு உதாரணமாக டெல்லியில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
நம்முடைய மானத்தை காப்பாற்றிக்கொள்ளவும், நம்முடைய தோற்றத்தை பின்னர் கவர்வதற்காகவும்தான் விதவிதமான ஆடைகளை அணிகிறோம். அதற்காக ஆடைகள் குறித்த சரியான புரிதல் இன்றி வாங்கி அணிந்து கொள்கிறோம். அந்தை ஆடை நமக்கு உகந்ததா? பனிக்காலத்திலும், கோடைக்காலத்திலும் அணியமுடியுமா குளிரை தாங்குமா? வெப்பத்தை தாங்குமா? கூட்டம் நிறைந்த இடங்களில் தாக்குப்பிடிக்குமா என்றெல்லாம் பார்ப்பதில்லை.

மானத்தை காக்கும் ஆடை உயிரையும் குடிக்கும் என்பதற்கு உதாரணமாக டெல்லியில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
நம்முடைய மானத்தை காப்பாற்றிக்கொள்ளவும், நம்முடைய தோற்றத்தை பின்னர் கவர்வதற்காகவும்தான் விதவிதமான ஆடைகளை அணிகிறோம். அதற்காக ஆடைகள் குறித்த சரியான புரிதல் இன்றி வாங்கி அணிந்து கொள்கிறோம். அந்தை ஆடை நமக்கு உகந்ததா? பனிக்காலத்திலும், கோடைக்காலத்திலும் அணியமுடியுமா குளிரை தாங்குமா? வெப்பத்தை தாங்குமா? கூட்டம் நிறைந்த இடங்களில் தாக்குப்பிடிக்குமா என்றெல்லாம் பார்ப்பதில்லை. விளம்பரத்தை நம்பி எதையாவது வாங்கி மாட்டிக்கொண்டு பின்னர் ஏற்படும் வேதனைகளை வெளியில் சொல்லமுடியாமல் சிரிப்பது போல் நடித்து வாழ்ந்து வருகின்றனர். சிலர் நன்றாக உள்ள ஆடையை தாறுமாறாக கிழித்துக் கொண்டு பிச்சைக்காரர்கள் போல் திரிகின்றனர். கேட்டால் அதுதான் இப்போது பேஷன் என்று நமக்கே ஒரு விளக்கம் தருகின்றனர்.

jeans

அதுபோல் ஒரு சம்பவம்தான் தலைநகர் டெல்லியில் நடைபெற்றுள்ளது. டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் சர்மா என்பவர் கடந்த மாதம் மிக இறுக்கமான ஜீன்ஸ் பேன்ட்டை அணிந்து கொண்டு காரில் 8 மணிநேரம் தொடர்ந்து பயணம் செய்துள்ளார்.
அப்போது சர்மாவின் காலில் ஏதோ மாற்றம் ஏற்படுவதை உணர்ந்துள்ளார். கால் முட்டியின் கீழ் பகுதி மெதுவாக சுருங்குவதை கவனித்துள்ளார். ஆனாலும் அதை சாதாரணமாக எடுத்துக்கொண்டு, மறுநாள் அலுவலகத்துக்கு சென்றுள்ளார். அங்கே சென்ற உடன் சுய நினைவை இழந்து கீழே விழுந்துள்ளார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காப்பற்றப்பட்டார். 
அதாவது, ரத்த அழுத்தம் மற்றும் இதயத்துடிப்பு மிகவும் குறைந்த நிலையில், சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பினார்.

இதற்குக் காரணம் மிக இறுக்கமாக ஜீன்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு நீண்ட நேரம் சர்மா பயணம் செய்ததால் வழக்கமான ரத்த ஓட்டம் தடை பட்டுள்ளது. ரத்த ஓட்டம் தடைபட்டதன் எதிர்வினையாக இதயத்திலும் திடீர் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், அவரின் ரத்த அழுத்தம் வீழ்ந்து, இதய துடிப்பும் குறைந்துள்ளது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.