பொள்ளாச்சி விவகாரம்; நக்கீரன் கோபால், சபரீசன் உள்ளிட்டோர் மீதான 5 வழக்குகளும் சி.பி.ஐ.-க்கு மாற்றம்!

 

பொள்ளாச்சி விவகாரம்; நக்கீரன் கோபால், சபரீசன் உள்ளிட்டோர் மீதான 5 வழக்குகளும் சி.பி.ஐ.-க்கு மாற்றம்!

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக நக்கீரன் கோபால், சபரீசன் உள்ளிட்டோர் மீதான 5 வழக்குகளும் சி.பி.ஐ.-க்கு மாற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது

சென்னை: பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக நக்கீரன் கோபால், சபரீசன் உள்ளிட்டோர் மீதான 5 வழக்குகளும் சி.பி.ஐ.-க்கு மாற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பொள்ளாச்சியில் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்து. அந்த மாணவிகளை மிரட்டி ஒரு கும்பல் பணம் பறித்து வந்துள்ளது. தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கும் இந்த சம்பவம் தொடர்பாக திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், சபரிராஜன்ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் ஆளுங்கட்சியின் தலையீடும் இருப்பதாக கூறப்படுகிறது.

pollachi

இந்த விவகாரத்தில் தொடர்புடைய கொடூர கும்பல், பெண்ணை அடித்து, மிரட்டி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிய வீடியோ ஒன்றை நக்கீரன் இணையதளம் வெளியிட்டிருந்தது. அந்த வீடியோ வெளியிடப்பட்டது தொடர்பாக சட்டப்பேரவை துணை பொள்ளாச்சி ஜெயராமன் காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.

அதனடிப்படையில், நக்கீரன் ஆசிரியர் கோபாலுக்கு மத்தியக்குற்றப்பிரிவு காவல்துறையான சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பினர். இதையடுத்து, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அளித்த புகாரில் முன் ஜாமின்  கோரி நக்கீரன் கோபால் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

sabareesan

இதனிடையே, பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக தன் குடும்ப உறுப்பினர்கள் மீது அவதூறு பரப்புவதாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கொடுத்த புகாரின்பேரில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுதவிர மேலும் 3 வழக்குகளையும் வேறு சில நபர்கள் மீது போலீசார் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், நக்கீரன் கோபாலின் முன்ஜாமின் மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. நக்கீரன் கோபால், சபரீசன் உள்பட பலர் மீது பதிவு செய்யப்பட்ட 5 வழக்குகளையும் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.

highcourt

இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம்,  இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. எனவே மனுதாரர் தேவைப்படும் போது முன்ஜாமின் கோரி நீதிமன்றத்தை அணுகலாம் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.