பொள்ளாச்சி விவகாரம்: அ.தி.மு.க.வை தொடர்ந்து தி.மு.க நிர்வாகி மகனுக்கு சம்மன்; அதிர்ச்சியில் தி.மு.க தலைமை!

 

பொள்ளாச்சி விவகாரம்: அ.தி.மு.க.வை தொடர்ந்து தி.மு.க நிர்வாகி மகனுக்கு சம்மன்; அதிர்ச்சியில் தி.மு.க தலைமை!

பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவத்தில் திமுக நிர்வாகியின் மகனுக்கு சிபிசிஐடி போலீசார்  நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளனர்.

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவத்தில் திமுக நிர்வாகியின் மகனுக்கு சிபிசிஐடி போலீசார்  நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளனர்.

பாலியல் வன்கொடுமை

thiru

பொள்ளாச்சியில் கடந்த ஏழு ஆண்டுகளாக 200-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி பெண்களை மயக்கி ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாக பதிவு செய்து அவர்களை மிரட்டி வந்துள்ள சம்பவம் தமிழகத்தையே குலைநடுக்க வைத்தது.  இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி நெஞ்சைப் பதைபதைக்க வைத்திருக்கிறது. 

சிபிசிஐடி சோதனை

polachi

இது தொடர்பாகத் திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், சபரி ராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக முதலில் கோவை மாவட்ட போலீசார் விசாரித்தாலும், தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரிக்கின்றனர். இதனால் கைது செய்யப்பட்ட நபர்களின் இல்லங்கள், பண்ணை வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர். இதில் செல்போன், பென் டிரைவ் உள்ளிட்டவை சிக்கின. 

தொடர் விசாரணை

pollachi

இதை தொடர்ந்து, நீதிமன்றம் அனுமதியோடு, காவலில் எடுக்கப்பட்ட திருநாவுக்கரசிடம் சிபிசிஐடி போலீசார் , விசாரித்து வந்தனர்.  நான்கு  நாட்களாக நடந்த இந்த விசாரணை கடந்த 18 ஆம் தேதியன்று நிறைவடைந்தது. குற்றவாளிகளிடம் வாங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் பல பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர். 

திமுக நிர்வாகியின் மகனுக்கு சம்மன்

dmk

இந்நிலையில் திருநாவுக்கரசு அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், பொள்ளாச்சியில் திமுக மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் மகன் மணிமாறனுக்கு, சிபிசிஐடி போலீசார் வரும் 28ம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது. திருநாவுக்கரசிடம் திமுக மாவட்டச் செயலர் மகன் மணிமாறன் நன்றாக பழகி வந்ததாகத்  தெரிகிறது. 

பார் நாகராஜ் ஆஜர் 

bar nagaraj ttn

முன்னதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனை மிரட்டிய வழக்கில் கைதாகி பின் ஜாமீனில் வெளிவந்த பார் நாகராஜுக்கு  வரும் 28ம் தேதி  ஆஜராகும்படி சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இருப்பினும் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுகவை சேர்ந்த நிர்வாகி மகனுக்கு பாலியல் வழக்கில் சம்மன் அனுப்பப்பட்டது திமுக தலைமைக்கு அதிர்ச்சி மட்டுமல்லாது கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக அண்ணா அறிவாலய வட்டாரத்தில் பேசப்படுகிறது.

 

இதையும் வாசிக்க: டிடிவி தினகரன் + எடப்பாடி பழனிசாமி + பாஜக + தேர்தல் ஆணையம் = சசிகலா விடுதலையும் திமுக வீழ்ச்சியும்?!