பொள்ளாச்சி வழக்கில் சிக்கியவர்களைக் காப்பாற்றும் அவசியம் அரசுக்கு இல்லை : அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

 

பொள்ளாச்சி வழக்கில் சிக்கியவர்களைக் காப்பாற்றும் அவசியம் அரசுக்கு இல்லை : அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான திருநாவுக்கரசு மற்றும் சபரி ராஜன் ஆகிய இருவர் மீதான குண்டர் சட்டத்தை நேற்று உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான திருநாவுக்கரசு மற்றும் சபரி ராஜன் ஆகிய இருவர் மீதான குண்டர் சட்டத்தை நேற்று உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இதற்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின், அதிமுக அரசின் அலட்சியத்தாலும், பாராமுகத்தாலும் அவர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

Jeyakumar

இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், மஹா புயலில் கடலில் சிக்கிக் கொண்ட மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு விட்டதாகவும் போராட்டம் நடத்திய மருத்துவர்களின் கோரிக்கையை அரசு விரைவில் சரி செய்யும் என்றும் கூறினார். 

அதனைத் தொடர்ந்து, திமுக தலைவர் மு.க ஸ்டாலினின் விமர்சனத்துக்குப் பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய கயவர்களைக் காப்பற்ற வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை என்று கூறினார்.