பொள்ளாச்சி பாலியல் விவகாரம்; திருநாவுக்கரசை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்வதில் சிக்கல்?!

 

பொள்ளாச்சி பாலியல் விவகாரம்; திருநாவுக்கரசை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்வதில் சிக்கல்?!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான திருநாவுக்கரசை நீதிமன்றத்திற்கு  அழைத்து வருவதில் சிக்கல் இருப்பதாக நீதிபதி நாகராஜிடம் கோவை மாநகர காவல் துறையினர் முறையீடு.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான திருநாவுக்கரசை நீதிமன்றத்திற்கு  அழைத்து வருவதில் சிக்கல் இருப்பதாக நீதிபதி நாகராஜிடம் கோவை மாநகர காவல் துறையினர் முறையீடு.

ஏராளமான பொதுமக்களும் , அரசியல் கட்சியினரும் திரண்டிருப்பதால் பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல் ஏற்படும் என நீதிபதியிடம் முறையிட்டனர். வீடியோ கான்பிரஸ் மூலம் திருநாவுக்கரசை ஆஜர்படுத்த  அனுமதிக்க வேண்டும் என கோவை தலைமை குற்றவியல் நடுவரிடம் காவல்துறையினர்  கோரிக்கை வைத்தனர். வீடியோ கான்பிரன்ஸ் மூலம் திருநாவுக்கரசை ஆஜர்படுத்த கூடாது என வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.