பொள்ளாச்சி பாலியல் வழக்கு: வாட்ஸ் ஆப், பேஸ்புக்குக்கு தடைவிதிக்க உயர்நீதிமன்றம் கோரிக்கை?!..

 

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: வாட்ஸ் ஆப், பேஸ்புக்குக்கு தடைவிதிக்க உயர்நீதிமன்றம் கோரிக்கை?!..

இந்த வழக்கில் வாட்ஸ் ஆப் முக்கிய பங்கு வகிக்கிறது. வாட்ஸ் ஆப் மூலமாகதான் பல வீடியோக்களை அந்த கொடூர கும்பல் பகிர்ந்திருக்கிறது.

பொள்ளாச்சியில் கடந்த ஏழு ஆண்டுகளாக 200-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி பெண்களை மயக்கி ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாக எடுத்து மிரட்டி வந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி நெஞ்சை பதைபதைக்கச் செய்தது. இது தொடர்பாகத் திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், சபரி ராஜன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

w

இந்த வழக்கை விசாரிப்பதில் வாட்ஸ் ஆப் நிறுவனம் சரியான ஒத்துழைப்பு அளிக்கவில்லை என சிபிசிஐடி தரப்பு உயர்நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளது. இந்த வழக்கில் வாட்ஸ் ஆப் முக்கிய பங்கு வகிக்கிறது. வாட்ஸ் ஆப் மூலமாகதான் பல வீடியோக்களை அந்த கொடூர கும்பல் பகிர்ந்திருக்கிறது. ஆனால் வாட்ஸ் ஆப் நிறுவனம் சரியான ஒத்துழைப்பு வழங்க மறுக்கிறது என சிபிசிஐடி அளித்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

s

சிபிசிஐடியின் மனுவை விசாரித்த நீதிபதி எஸ். மணிக்குமார் மற்றும் நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு, சைபர் குற்றங்களை தடுக்க உதவாத, இந்த மண்ணின் சட்டத்தை மதிக்காத பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ் ஆப் மற்றும் யூடியூப் போன்ற சமூக வலைதளங்களை தடைசெய்ய வேண்டும் என மத்திய அரசாங்கத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

தகவல் தொழில்நுட்ப சட்டம் 2011 அளித்துள்ள தகவலில் சமூக வலைதள நிறுவனங்கள் நாடு முழுவதும் குறைதீர்க்கும் அதிகாரிகளை நியமிக்க தவறிவிட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது. வாட்ஸ் ஆப் நிறுவனம் தங்கள் தனியுரிமை கொள்கைகளில் சட்டத்துக்கு புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடாதீர்கள். அரசாங்கத்தின் வேண்டுகோளை ஏற்று நடந்துகொள்ளுங்கள் என்பதை குறிப்பிட்டுள்ளது. 

wh

பொதுநல வழக்குகளில் சமூக வலைதள நிறுவனங்கள் இவ்வாறு நடப்பதற்கு, வக்கீல் கிளமெண்ட் ஆண்டனி ரூபின், சமூக வலைதளங்களில் ஆதார் அட்டையை இணைப்பது அவசியமானது என சுட்டிக்காட்டியுள்ளார். அப்போதுதான் சமூக வலைதளங்களை யார் சட்டத்துக்கு விரோதமாக பயன்படுத்துகிறார்கள் என எளிதில் அறியமுடியும் என்கின்றார். இந்த வழக்கை ஏப்ரல் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, சமூக வலைதள நிறுவனங்கள் அனைத்துக்கும் இதுதொடர்பாக நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

10 நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை: கோட்டைவிட்ட இலங்கை அரசு; முப்படை தளபதிகள் அதிரடி மாற்றம்?