பொள்ளாச்சி பாலியல் வழக்கு: வீடியோவை வெளியிட்ட நக்கீரன் கோபால் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர்!

 

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: வீடியோவை வெளியிட்ட நக்கீரன் கோபால் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர்!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் வீடியோவை வெளியிட்ட  நக்கீரன் கோபால் சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜரானார்.

சென்னை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் வீடியோவை வெளியிட்ட  நக்கீரன் கோபால் சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜரானார்.

pollachi

பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் பல பெண்களைப் பொள்ளாச்சியில் ஒரு கும்பல் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியிருக்கும் சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்கு ஆளாக்கியது.  அந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி நெஞ்சை பதைபதைக்க வைத்தது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், சபரிராஜன் ஆகியோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.

இருப்பினும்  முதன்முதலில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்த வீடியோவை நக்கீரன் இணையத்தில்  வெளியிட்டது நக்கீரன் தான். இதனால் இவ்வழக்கில்  நக்கீரன் ஆசிரியர் கோபாலுக்கு  கோவை சிபிசிஐடி அலுவலகத்தில்  ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.

hc

இதை எதிர்த்து நக்கீரன் கோபால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் சென்னையிலிருந்த அதிகாரி கோவைக்கு சென்றுவிட்டு அங்கிருந்து சம்மன் அனுப்புகிறார். இது தேர்தல் நேரத்தில் நக்கீரன் கோபாலின் பத்திரிகைப் பணிகளை முடக்கும் செயலாக உள்ளது. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருக்கிறோம்.  ஆனால் இந்த வழக்கு தொடர்பாகச் சென்னையில் வைத்து மட்டுமே விசாரிக்க வேண்டும்.தங்கள் தரப்பில் உள்ள ஆதாரங்கள் அனைத்தையும் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கத் தயாராக இருக்கிறோம்’ என தெரிவித்திருந்தார்.

gopal

இதை தொடர்ந்து வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சென்னையிலேயே நக்கீரன் கோபாலை விசாரிக்குமாறும், ஏப்ரல் 1ம் தேதி சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறும் உத்தரவிட்டது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் விசாரணைக்காக நக்கீரன் கோபால் இன்று ஆஜரானார். 

cbi

முன்னதாக பொள்ளாச்சி வீடியோவை வெளியிட்டதற்கு, பெண் பிள்ளைகள் சம்பந்தப்பட்ட விவகாரத்தை இப்படி பொது வெளியில் வெளியிடலாமா? என்று சிலர் நக்கீரன் கோபால் மீது பாய, அதற்கு அவரோ, வீடியோவை வெளியிடக் கூடாது என்ற சமூக ஆர்வலர்களின் கருத்தை ஏற்க முடியாது. வீடியோவை வெளியிட்டதால் தான் உண்மை வெளியே வந்தது. குற்றவாளிகள் தப்பிக்கக் கூடாது என்பதற்காகவே, வீடியோ வெளியிடப்பட்டது’ என்று விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதையும் வாசிக்க: பிரசாரத்திற்கு செல்லும் வேட்பாளர்களே உஷார்: நூதன திருட்டில் ஈடுபடும் கொள்ளையர்கள்; வீடியோ உள்ளே!