பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு.. தமிழக அரசின் மனுவைத் தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்

 

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு.. தமிழக அரசின் மனுவைத் தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்

7 ஆண்டுகளாகத் தொடர்ந்து 200 பெண்களுக்கு மேல் ஆசை வார்த்தை பேசி, கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்தனர்.

பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. 7 ஆண்டுகளாகத் தொடர்ந்து 200 பெண்களுக்கு மேல் ஆசை வார்த்தை பேசி, கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் குற்றவாளிகளான சபரி ராஜன், திருநாவுக்கரசு, சதீஷ் மற்றும் வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குண்டர் சட்டமும் போடப்பட்டது. 

ttn

ஆனால், அவர்களைக் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உரிய ஆதாரம் இல்லாததால் சென்னை உயர்நீதிமன்றம் அவர்களின் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த வழக்கை சிபிஐ போலீசார் விசாரித்து வரும் நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள், ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட குண்டர் சட்டம் முடிவடையும் தறுவாயில் உள்ளதால் இந்த வழக்கில் தலையிட விரும்பவில்லை என்று கூறி வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளனர்.