பொள்ளாச்சி கொடூரம்: பொள்ளாச்சி ஜெயராமன் மகன்களிடம் விசாரணை நடத்தப்படும்; மகளிர் ஆணையம் தகவல்!

 

பொள்ளாச்சி கொடூரம்: பொள்ளாச்சி ஜெயராமன் மகன்களிடம் விசாரணை நடத்தப்படும்; மகளிர் ஆணையம் தகவல்!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், பொள்ளாச்சி ஜெயராமன் மகனிடம் விசாரணை நடத்துவோம் என்று மாநில மகளிர் ஆணையத் தலைவி கண்ணகி பாக்கியநாதன் தெரிவித்துள்ளார். 

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், பொள்ளாச்சி ஜெயராமன் மகனிடம் விசாரணை நடத்துவோம் என்று மாநில மகளிர் ஆணையத் தலைவி கண்ணகி பாக்கியநாதன் தெரிவித்துள்ளார். 

பொள்ளாச்சி விவகாரம்:

pollachi ttn

பொள்ளாச்சியில் கடந்த ஏழு ஆண்டுகளாக 200-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி பெண்களை மயக்கி ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாக பதிவு செய்து அவர்களை மிரட்டி வந்துள்ள சம்பவம் தமிழகத்தையே குலைநடுங்க வைத்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி நெஞ்சை பதைபதைக்க வைத்திருக்கிறது. இது தொடர்பாகத் திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், சபரி ராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொள்ளாச்சி ஜெயராமனின் மகனிடம் விசாரணை நடத்துவோம்:

pollachi jayaraman ttn

இந்தச் சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்து மாநிலம் முழுவதும் கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக, கோவை விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில மகளிர் ஆணையத் தலைவி கண்ணகி பாக்கிய நாதன்,  ‘கோவை மாவட்ட ஆட்சியர் அறிக்கை அளித்ததின் அடிப்படையில் விசாரணை நடத்தினோம். இந்த விவகாரத்தில் காவல்துறை முறையாக விசாரணை நடத்தி வருகிறார்கள். ஊடகங்கள் பொய்யான தகவல்களைப் பரப்பி வருகிறார்கள். பெண்கள் குறைகளைச் சொன்னால், நடவடிக்கை எடுக்கப்படும். பெண்ணின் பெயரை குறிப்பிட்ட கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜனிடம் விசாரணை நடத்தவுள்ளோம். இந்த விவகாரத்தில்  பாரபட்சம் இல்லாமல் விசாரணை நடத்தப்படும். தேவைப்பட்டால் பொள்ளாச்சி ஜெயராமனின் மகனிடம் விசாரணை நடத்துவோம். பாதிக்கப்பட்ட பெண்களை வெளிப்படுத்தக் கூடாது என்பதால்,  ரகசியமாக விசாரணை நடத்தவுள்ளோம். இந்த விவகாரம் தொடர்பாக 044-2855155, 044-28592750 என்ற எண்ணில் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்கலாம்’ என்றார்.

கல்லூரிகளுக்கு விடுமுறை:

protest ttn

இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து மாநிலம் முழுவதும் கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பொள்ளாச்சியில் சில கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.