பொறுமையை இழந்த ‘கூல் கேப்டன்’: அம்பயரிடம் கடும் வாக்குவாதம்; அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!

 

பொறுமையை இழந்த ‘கூல் கேப்டன்’: அம்பயரிடம் கடும் வாக்குவாதம்; அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!

கூல் கேப்டன் என்று பெயர் வாங்கிய தோனி நேற்றைய போட்டியில் ஆக்ரோஷமாக மாறியது அவரது ரசிகர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியது. 

ஜெய்ப்பூர்:  ‘கூல் கேப்டன்’  தோனி நேற்றைய போட்டியில் ஆக்ரோஷமாக மாறியது அவரது ரசிகர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியது. 

rr

ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. ஜெய்ப்பூரில் நேற்று  நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 151 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியில் தொடக்கம் முதலே வாட்சன் 0, டு பிளசிஸ் 7, ரெய்னா 4, ஜாதவ் 1 என அடுத்தடுத்து வெளியேறி அதிர்ச்சியைத் தந்தனர்.  ஆனால் அம்பதி ராயுடு – தோனி இருவரும் நிதானமாக ஆடி சென்னை அணியை சரிவிலிருந்து மீட்டனர். 

dhoni

ராஜஸ்தான் பந்துவீச்சை திணறடித்த அம்பதி ராயுடு 47 பந்துகளில் 57 ரன்கள்  எடுத்து ஆட்டமிழக்கக்  கடைசி ஓவரில் 6 பந்துகளுக்கு 18 ரன்கள் சென்னை அணிக்குத் தேவைப்பட்டது.  அப்போது கடைசி ஓவரில், முதல் பந்து  இடுப்புக்கு மேல் வீசப்பட்டதால்  நடுவர் ஒருவர் நோ பாலாக அறிவித்தார். மற்றொரு நடுவர் அதை மறுக்க, நோ பால் இல்லை என்று தீர்மானிக்கப்பட்டது. இதை கண்ட தோனி, மைதானத்திற்குள் வந்தார். இதை பார்த்த சென்னை ரசிகர்கள், தோனி …தோனி…. என்று ஆர்ப்பரித்தனர். இதையடுத்து அவர் டுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின் அவரை சமாதானம் செய்து நடுவர்கள் அனுப்பினர். கடைசி ஒரு பந்தில்  3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில்  மிச்செல் சன்டெர்   சிக்ஸர் அடித்து  சென்னை அணிக்கு  வெற்றியை தேடி தந்தார்.

 

எந்த போட்டியிலும் பொறுமையை இழக்காத தல தோனியையே கோபப்படுத்திடீங்களே என்று அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருவதோடு, அவரை இப்படி பார்த்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும் கூறி வருகின்றனர். நடுவர்களுடன்  வாக்குவாதத்தில் ஈடுபட்டதற்காக தோனிக்கு ஒரு போட்டிக்கான சம்பளத்திலிருந்து 50 சதவீதம் அபராதமும் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இதையும் வாசிக்க: ‘எல்லாம் புகழும் தோனிக்கே’ : திக்.. திக்.. நிமிடத்தில் சென்னை அணி த்ரில் வெற்றி!