பொறுமையாக இருங்கள்; வதந்திகளை நம்பாதீர்கள்: ‘தளபதி 63’ அப்டேட் இது தான்!?

 

பொறுமையாக இருங்கள்; வதந்திகளை நம்பாதீர்கள்: ‘தளபதி 63’ அப்டேட் இது தான்!?

தளபதி 63 படம் பற்றிய அறிவிப்புகள் மற்றும் அப்டேட்கள் தகுந்த நேரத்தில் வெளியிடப்படும் என்று படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை:  தளபதி 63 படம் பற்றிய அறிவிப்புகள் மற்றும் அப்டேட்கள் தகுந்த நேரத்தில் வெளியிடப்படும் என்று படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

atlee

இயக்குநர்  அட்லீ – விஜய் கூட்டணி தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து  மூன்றாவது முறையாக 
இணைந்துள்ளது. தளபதி 63 என்று அழைக்கப்படும் பெயரிடப்படாத இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இப்படத்தில்  ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு, கதிர், ஆனந்த்ராஜ், டேனியல் பாலாஜி, இந்துஜா உள்ளிட்ட ஏராளமானானோர் நடிக்கின்றனர். 

vijay

பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த இந்த  கதைக்களத்தில் நடிகர்  விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். இதனால் சென்னை ஈவிபி ஸ்டுடியோவில் கால்பந்து மைதானம் போன்ற  பிரமாண்ட செட் அமைக்கப்பட்டுப் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இருப்பினும் ஷூட்டிங்கில் உதவியாளர் ஒருவர் படுகாயம், கதை திருட்டு விவகாரம், தீ விபத்து என பல்வேறு காரணங்களால் ஷூட்டிங் தடைப்பட்டுப் போனது. மேலும் படத்தைக் குறித்த இந்த சர்ச்சைகளால் விஜய் ரசிகர்கள் களையிழந்து இருந்தனர். 

 

இந்நிலையில்  சர்ச்சைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் தளபதி 63 படக்குழு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,  4-வது கட்ட படப்பிடிப்பைத்  துவங்கியுள்ள தளபதி 63 படத்தின் ஷூட்டிங் தொடர்ந்து 70 நாட்களாக நடந்து வருகிறது.  எங்களுடைய கடின உழைப்புக்குக் காரணம்  தியேட்டரில் ரசிகர்கள் படத்தை கொண்டாட வேண்டும் என்பது தான்.  படம் பற்றிய அறிவிப்புகள் மற்றும் அப்டேட்கள் தகுந்த நேரத்தில் வெளியிடப்படும். அதுவரை பொறுமையாகக் காத்திருங்கள். வதந்திகளை நம்பாதீர்கள்’ என்று அறிவித்துள்ளது.  படக்குழுவின் இந்த திடீர் அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.