பொருளாதார வீழ்ச்சி ! சரிவை சந்தித்த பிஸ்கெட் லாபம் ! பிரிட்டாணியாவின் 100வது பிறந்த நாளுக்கு மத்திய அரசு பரிசு

பொருளாதார வீழ்ச்சி ! சரிவை சந்தித்த பிஸ்கெட் லாபம் ! பிரிட்டாணியாவின் 100வது பிறந்த நாளுக்கு மத்திய அரசு பரிசு

1918ம் தொடங்கி 100 ஆண்டுகள் நிறைவு செய்த பிரிட்டாணியா நிறுவனம் இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சியால் நஷ்டத்தை நோக்கி பயணித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
2018ம் ஆண்டு நூற்றாண்டை நிறைவு செய்த பிரிட்டாணியா நிறுவனம் பிறந்த நாள் விழாவை 3 மாதங்கள் கொண்டாடவும் ஊழியர்களுக்க போனஸ் அறிவிக்கவும் திட்டமிட்டிருந்தது.

கம்பெனி தொடங்கியபோது டைகர் பிஸ்கட், குட் டே, ரஸ்க் என போன்ற பிஸ்கட் ரகங்களை தயாரித்த பிரிட்டானியா நிறுவனம் 50-50, மேரி கோல்டு, நியூட்ரி சாய்ஸ் போன்ற உணவு கட்டுப்பாடு பிஸ்கட்டுகளையும் தயாரித்து வந்தது..

britannia

பிஸ்கட் விற்பனை பிரிவில் 75 %, இதர உணவு வகைகளில் 25% வருமானத்தை வரும் 5 ஆண்டுகளில் 50-50% ஆக உயர்த்த பிரிட்டானியா நிறுவனம் திட்டமிட்டிருந்தது.
ஆனால் இந்த ஆண்டு ஆகஸ்ட் – செப்டம்பர் மாதங்களில் கடுமையான சரிவைச் சந்தித்துள்ளது பிரிட்டாணியா. விற்பனையில் ஆண்டுக்கு 7-11% வரை உயர்ந்து லாபத்தில் முதலிடத்தில் இருந்த பிரிட்டானியா, தற்போது பொருளாதார வீழ்ச்சியால் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
ஜிஎஸ்டி, பணமதிப்பு நீக்கத்தால் ஆட்டோமொபைல் துறை கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்ததை அடுத்து உணவுத்துறையும் அந்த வரிசையில் இணைந்துள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

britannia biscuits

தற்போது பிரிட்டானியா நிறுவனம் 5 ரூபாய் மதிப்பிலான பிஸ்கட்டுகளை கூட விற்பனை செய்யமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்பும் அதிகமானதால் மூலப்பொருட்களை வாங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டதால் ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு அளிக்கப்படும் துயர நிலை உருவாகியுள்ளதாக அந்த நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.