பொருளாதார மந்த நிலைக்கு ஜிஎஸ்டி- தான் காரணம்! சிறையில் புலம்பும் சிதம்பரம்

 

பொருளாதார மந்த நிலைக்கு ஜிஎஸ்டி- தான் காரணம்! சிறையில் புலம்பும் சிதம்பரம்

பொருளாதார மந்த நிலைக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு தான் காரணம் என முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

பொருளாதார மந்த நிலைக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு தான் காரணம் என முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

chidambaram

ஐ.என்.எஸ்., மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரத்தின் ட்விட்டர் பக்கங்களை அவரது குடும்ப உறுப்பினர்கள் இயக்கிவருகின்றனர். இந்நிலையில் ப. சிதம்பரத்தின் கருத்துக்களை கேட்டு ட்விட்டரில் பதிவிட்டுவருவதாக கூறப்படுகிறது. அவ்வப்போது நாட்டு பிரச்னைகளுக்கு சிறையிலிருந்தே கருத்து சொல்லும் ப.சிதம்பரம் இந்த முறை பொருளாதார மந்த நிலையை பற்றி பேசியுள்ளார். 

twitter

இதுதொடர்பாக ப.சிதம்பரத்தின் ட்விட்டர் பக்கத்தில், “பொருளாதார மந்த நிலைக்கு, ஜிஎஸ்டி வரி விதிப்பும், அதை தவறாக செயல்படுத்தியதுமே முக்கிய காரணம். ஜிஎஸ்டியை தவறாக செயல்படுத்தியதை பிரதமரின் பொருளாதார ஆலோசகரே ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் அவர், பணமதிப்பு நீக்க நடவடிக்கையை மறந்துவிட்டார். பொதுமக்கள் மற்றும் வணிகர்களின் கருத்துகளை கேட்டே ஜிஎஸ்டி கொண்டுவரப்பட்டது என நிதியமைச்சர் சொல்வது தவறு. இது போன்ற பிரச்னைகள் வரும் என்பதால்தான் ஜிஎஸ்டி மசோதாவின் வரைவு சட்டத்தை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்ட போது நாங்கள் அதை எதிர்த்தோம்” எனப்பதிவிட்டுள்ளார்.