பொருளாதார பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா! – இன்டிகோ விமான நிறுவனம் ஊழியர்களுக்கு சம்பளம் கட்

 

பொருளாதார பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா! – இன்டிகோ விமான நிறுவனம் ஊழியர்களுக்கு சம்பளம் கட்

கொரோனா காரணமாக ஆரோக்கியம் மட்டுமல்ல, இந்தியப் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. சுற்றலா தலங்கள், சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. பொது மக்கள் வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

கொரோனா காரணமாக விமான சேவை மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதால் இன்டிகோ நிறுவன ஊழியர்களுக்கு 25 சதவிகித சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

indigo-airlines-786

கொரோனா காரணமாக ஆரோக்கியம் மட்டுமல்ல, இந்தியப் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. சுற்றலா தலங்கள், சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. பொது மக்கள் வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இதனால் எல்லா துறையிலும் பணிகள் தேக்கம் ஏற்பட்டுள்ளது, வருவாய் தடைப்பட்டுள்ளது. இந்த வருவாய் இழப்பை எதிர்கொள்ள பணியாளர்களை வேலையைவிட்டு தூக்கும் நிலைக்கு நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன. 

corona-virus-80.jpg

இந்த நிலையில் இண்டிகோ விமான போக்குவரத்து நிறுவனம் தன்னுடைய ஊழியர்களுக்கு 25 சதவிகிதம் சம்பளம் பிடித்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. இது குறித்து அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரோனோஜாய் தத்தா கூறுகையில், “விமான சேவைத்துறை கடும் வீழ்ச்சியை சந்தித்திருப்பதால், வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்க சம்பளம் பிடித்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. என்னுடைய சம்பளத்தில் 25 சதவிகிதம் பிடித்தம் செய்யப்பட உள்ளது” என்றார்.

indigo airlines 87

வீட்டு லோன், பர்சனல் லோன், இ.எம்.ஐ என்று பலரும் பல விதங்களில் மாதம் பிறந்ததும் சம்பளத்துக்காக காத்திருக்கின்றனர். இந்த நிலையில் சம்பளத்தில் பிடித்தம் என்றால் எப்படி சமாளிக்கப் போகிறார்களோ என்று தெரியவில்லை. ஒரு சில மாதங்களுக்காவது வங்கிக் கடன் இ.எம்.ஐ-க்கு விலக்கு அளிப்பதன் மூலம் இந்த பாதிப்பிலிருந்து தப்ப முடியும் என்று பலரும் வேதனை தெரிவித்து வருகின்றனர்.