பொருளாதார சிக்கலை சமாளிக்க ரூ.20 லட்சம் கோடிக்கு சிறப்பு திட்டங்கள்- பிரதமர் மோடி

 

பொருளாதார சிக்கலை சமாளிக்க ரூ.20 லட்சம் கோடிக்கு சிறப்பு திட்டங்கள்- பிரதமர் மோடி

வருகிற 17 ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவு பெறவுள்ள நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது, “கொரோனாவுடன் போராடி உயிரிழப்பையும் தவிர்க்க வேண்டும் அதே நேரத்தில் முன்னேறவும் வேண்டும். ரூ.20 லட்சம் கோடிக்கு பொருளாதார சிறப்புத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும். இந்த பொருளாதார வளர்ச்சி திட்டத்தின் மூலமாக நாட்டின் பொருளாதாரத்துக்கு ஊக்கம் கிடைக்கும். சிறப்பு திட்டங்கள் மூலம் ஏழை, எளிய மக்கள், விவசாயிகள் மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறுவர். இந்தியாவின் வளர்ச்சி பொருளாதாரம், உட்கட்டமைப்பு, மக்கள் சக்தி, உற்பத்தி தேவை, தொழில்நுட்பம் ஆகிய  ஐந்து முக்கிய அம்சங்களை கொண்டது. உலக நாடுகளுக்கு பொருட்கள் மற்றும் சேவைகளை அளிப்பதில் இந்தியா மிக்கிய இடம்பெறவேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கம். இதன் மூலம் தொழில்துறை வளர்ச்சியும் ஊக்கம் பெறும். 

mOdi

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10% கொரோனா மீட்பு நடவடிக்கைக்காக வழங்கப்படும். கொரோனா பாதிப்பை சமாளிக்க நம்நாட்டில் உள்நாட்டு தொழில்துறையே கைக்கொடுத்திருக்கிறது” எனக்கூறினார்.