பொருளாதார ஆய்வறிக்கையில் கடந்த நிதியாண்டு ஒரு பார்வை…..

 

பொருளாதார ஆய்வறிக்கையில் கடந்த நிதியாண்டு ஒரு பார்வை…..

கடந்த நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி குறைந்தாலும், நிதிப்பற்றாக்குறை கட்டுக்குள் இருப்பதாக பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நாட்டின் தலைமை பொருளாதார ஆலோசகர் சுப்பிரமணியன் தயாரித்த 2018-19ம் நிதியாண்டின் பொருளாதார ஆய்வறிக்கையை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில் கடந்த ஜனவரி-மார்ச் காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 20 காலாண்டுகளில் இல்லாத அளவுக்கு 5.8 சதவீதமாக குறைந்தது. ஒட்டு மொத்தத்தில் கடந்த நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு  6.8 சதவீதமாக குறைந்திருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 

நிதிப்பற்றாக்குறை

2018-19ம் நிதியாண்டில் நாட்டின் நிதிப்பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.4 சதவீதமாக இருந்திருக்கம் என மதிப்பிடப்பிடப்பட்டுள்ளது. 2015-16ம் நிதிப்பற்றாக்குறை 3.9 சதவீதமாகவும், 2016-17 மற்றும் 2017-18ம் நிதி ஆண்டுகளில் நிதிப்பற்றாக்குறை 3.5 சதவீதமாக குறைந்தது. இந்நிலையில், கடந்த நிதியாண்டிலும் நிதிப்பற்றாக்குறை சிறிது குறைந்திருப்பது நாட்டின் வளர்ச்சிக்கு நல்ல அறிகுறியாகும்.

வளர்ச்சி

2018ம் ஆண்டு மத்தியில் இருந்து கிராம சம்பளம் வளர்ச்சி கண்டு வருகிறது. தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ், 9.5 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. திறந்தவெளி மலம் கழிப்பது இல்லாத கிராமங்களின் எண்ணிக்கை 5.5 லட்சமாக உயர்ந்தது. மேலும் திறந்த வெளியில் மலம் கழிப்பது குறைந்தததால் வயிற்றுப்போக்கு மற்றும் மலேரியாவால் ஏற்படும் உயிர் இழப்புகள் குறைந்தது.