பொருளாதாரம் முக்கியமல்ல இப்பம் உயிர்தான் முக்கியம்…..டெல்லியை தொடர்ந்து லாக்டவுனை நீட்டிக்க விரும்பும் 5 மாநிலங்கள்….

 

பொருளாதாரம் முக்கியமல்ல இப்பம் உயிர்தான் முக்கியம்…..டெல்லியை தொடர்ந்து லாக்டவுனை நீட்டிக்க விரும்பும் 5 மாநிலங்கள்….

மே 16ம் தேதி வரை லாக்டவுன் தொடர்ந்து நீடிக்கும் என டெல்லி அரசு அறிவித்ததையடுத்து, தற்போது மகாராஷ்டிரா உள்ளிட்ட 5 மாநில அரசுகள் லாக்டவுனை நீட்டிக்க விரும்புகின்றன.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு மே 3ம் தேதி வரை மொத்தம் 40 நாட்கள் லாக்டவுனை நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்த லாக்டவுனால் பெரிய அளவில் கொரோனா வைரஸ் பரவுவது தடுக்கப்பட்டுள்ளது என்றாலும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.

நோயாளிக்கு மருத்துவ பரிசோதனை

தெலங்கான அரசு ஏற்கனவே பிரதமர் மோடி அறிவித்த லாக்டவுன் காலத்தை காட்டிலும் கூடுதலாக 4 நாட்கள் அதிகரித்து மே 7ம் தேதி வரை நீட்டித்தது. மேலும் லாக்டவுனை நீட்டிப்பதா அல்லது நீக்குவதா என்பது குறித்து லாக்டவுன் முடிவதற்கு 2 நாட்களுக்கு முன்பு முடிவு எடுக்கப்படும் என தெலங்கானா அரசு அறிவித்தது. இந்த நிலையில் நேற்று முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு அங்கு லாக்டவுன் மே 16ம் தேதி வரை தொடர்ந்து நீடிக்கும் என அறிவித்தது. 

நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்

இதனைதொடர்ந்து மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், பஞ்சாப் மற்றும் ஒடிசா ஆகிய 5 மாநில அரசுகளும் கொரோனா வைரஸ் ஹாட் ஸ்பாட் பகுதிகளில் மே 3ம் தேதிக்கு பிறகும் லாக்டவுனை நீட்டிக்க விரும்புகின்றன. அதேசமயம் குஜராத், தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், அரியானா, இமாச்சல பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய 6 மாநிலங்களும் மத்திய அரசின் உத்தரவை பாலோ செய்யும் முடிவில் உள்ளதாக தகவல். அசாம், கேரளா மற்றும் பீகார் ஆகிய மாநிலங்கள் நாளை பிரதமர் மோடியுடன் வீடியோ கான்பரன்சிங்கில் பேசிய பிறகு முடிவு செய்து கொள்ளலாம் என்ற நிலைப்பாட்டில் உள்ளன. ஆக, தற்போதைய சூழ்நிலையில் எல்லா மாநிலங்களும் லாக்டவுனை தளர்த்துவதில் தயக்கம் காட்டுவது தெளிவாக தெரிகிறது.