பொருளாதாரத்தை யார் காப்பாற்றுவார்?…. மோடியை மீண்டும் சீண்ட ஆரம்பித்த சத்ருகன் சின்ஹா…

 

பொருளாதாரத்தை யார் காப்பாற்றுவார்?…. மோடியை மீண்டும் சீண்ட ஆரம்பித்த சத்ருகன் சின்ஹா…

பொருளாதாரத்தை யார் காப்பாற்றுவார்? அதற்காக ஏதாவது செய்ய வேண்டும் என நீங்க நினைக்வில்லையா? என பிரதமர் மோடியை முன்னாள் பா.ஜ. எம்.பி.யும், தற்போதைய காங்கிரஸ் கட்சிக்காரருமான சத்ருகன் சின்ஹா சீண்ட ஆரம்பித்து விட்டார்.

பிரலப பாலிவுட் மூத்த நடிகரும், தற்போதைய காங்கிரஸ் கட்சிக்காரருமான சத்ருகன் சின்ஹா அந்த கட்சியில் சேருவதற்கு முன் பா.ஜ.வில் இருந்தார். சத்ருகன் சின்ஹா பா.ஜ. எம்.பி.யாக  இருந்த போதும் பிரதமர் மோடியையும், ஆட்சியையும் அடிக்கடி விமர்சனம் செய்து வந்தார். இந்நிலையில், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட அவருக்கு பா.ஜ. தலைமை வாய்ப்பு கொடுக்கவில்லை. அந்த கோபத்தில் பா.ஜ.விலிருந்து விலகி காங்கிரஸ் சேர்ந்தார்.

சத்ருகன் சின்ஹா, ராகுல் காந்தி

காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் அவருக்கு தோல்விதான் கிடைத்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பிரதமர் சுதந்திர தின உரையை சத்ருகன் சின்ஹா பாராட்டி பேசி இருந்தார். இது அரசியில் வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், சத்ருகன் சின்ஹா மீண்டும் பிரதமர் மோடியை விமர்சிக்க தொடங்கி விட்டார்.

சத்ருகன் சின்ஹா தனது தொடர்ச்சியான டிவிட்டுகளில் கூறியிருப்பதாவது: பொருளாதார தேக்கநிலை வெளிப்படையாக தெரிகிறது மற்றும் அது குறித்து எல்லோரும் பேசி கொண்டு இருக்கிறோம். நீங்கள் இதற்காக ஏதாவது செய்ய வேண்டும் என நினைக்கவில்லையா? வேளாண் முதல் வாகனம், சோப்பு முதல் ஷாம்ப் மற்றும் ஜவுளி முதல் பிஸ்கட்  என பல்வேறு துறைகளை சேர்ந்த நிறுவனங்கள் உற்பத்தி குறைப்பு, பணி நீக்கம் போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. சில துறைகள் மற்றும் தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உங்களது அரசு அதனை மீட்கும் நிலையில் உள்ளது.

மோடி

பொருளாதார மந்த நிலையால் வேலை இல்லாதோர் விகிதம் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6 சதவீதத்துக்கு மேல் உயர்ந்துள்ளது. 3 கோடி பேர் வேலையில்லாமல் உள்ளனர். இந்த பிரச்சினைக்கு என்ன காரணம்? ரூபாய் நோட்டு தடையா? ஜி.எஸ்.டி.யா? கொள்கைகளா? நாங்கள் தொடர்ந்து யோசித்து கொண்டு இருக்கிறோம். ஆனால் எங்களுக்கு தெரியும் அது நீங்கள், மரியாதைக்குரிய பிரதமர் மற்றும் ஹீரோ.

யார் பொருளாதாரத்தை காப்பாற்றுவார். தயவு செய்வு தடுமாறும் பொருளாதாரத்துக்கு புத்துயிர் கொடுக்க விரிவான செயல் திட்டங்கள் மற்றும் ஊக்குவிப்பு சலுகைகளை செயல்படுத்துங்கள். நாடு முழுவதும் வெற்றியாளர்கள் உள்ளனர் என நீங்கள் நம்பினால், நீங்கள் இலக்கை எட்ட  என்னை போன்றவர்கள் உங்களுக்கு எந்த உதவியும் செய்ய தயாராக உள்ளோம். 

இன்னும் நம்பிக்கை உள்ளது. அது இன்னும் சிறப்பாக வரும். ஜெய் ஹிந்த். என பதிவு செய்து இருந்தார்.