பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடியில் தன்னிறைவு இந்தியா திட்டம்! அவ்வளவுதான் அதுக்கு மேல எதுவும் கேக்காதீங்க…  – நிர்மலா சீதாராமன்

 

பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடியில் தன்னிறைவு இந்தியா திட்டம்! அவ்வளவுதான் அதுக்கு மேல எதுவும் கேக்காதீங்க…  – நிர்மலா சீதாராமன்

பிரதமர் அறிவித்த ரூ.20 லட்சம் கோடிக்கான சிறப்பு திட்டங்களை நிதியமைச்சர் சீதாராமன் அறிவித்தார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன்,  “இந்தியா தற்சார்பு நிலையை எட்டுவதற்கான நோக்கத்துடன் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. தொலைநோக்கு திட்டத்தை பிரதமர் நேற்று அறிவித்திருக்கிறார். சுயசார்பு பாரதம் என்ற பெயரில் திட்டங்கள் செயல்படுத்தப்படும். பலதுறை அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பலகட்ட ஆலோசனையின் அடிப்படையில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. 5 அம்ச நோக்கங்களுடன் பொருளாதார வளர்ச்சி சிறப்பு திட்டங்கள் கவனம் செலுத்தப்படுகின்றன. பிரதமர் அறிவித்த ரூ.20 லட்சம் கோடிக்கான சிறப்பு திட்டத்தின் பெயர் “தன்னிறைவு இந்தியா”. 

நிதியமைச்சர் சீதாராமன்

இந்தியா தன்னிறைவு பெறுவதுடன் உலகிற்கும் உதவும் நோக்கில் திட்டங்கள் இருக்கும். தொழில் நடத்துவது எளிதாக்கப்படும். உள்ளூர் பொருட்கள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்பதை அடிப்படையாக  கொண்டு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. பொருளாதாரம், உட்கட்டமைப்பு, மனித வளம், உற்பத்தி, தொழில்நுட்பத்தை மையமாக்கி திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பில் இந்தியா தன்னிறைவை எட்டியிருக்கிறது. இந்திய வர்த்தக சின்னங்களை சர்வதேச அளவில் கொண்டு செல்ல இத்திட்டம் கொண்டு செல்லும்” என தெரிவித்தார்.