பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கக் கூடாதா? எகிறும் தமிழிசை

 

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கக் கூடாதா? எகிறும் தமிழிசை

பொருளாதாரத்தில் பின் தங்கிய முற்பட்ட பிரிவினருக்கு வாய்ப்புகள் கிடைக்கக் கூடாதா? என தமிழிசை காட்டமாக கெள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை: பொருளாதாரத்தில் பின் தங்கிய முற்பட்ட பிரிவினருக்கு வாய்ப்புகள் கிடைக்கக் கூடாதா? என தமிழிசை காட்டமாக கெள்வி எழுப்பியுள்ளார்.

பொருளாதாரத்தில் பின் தங்கிய முற்பட்ட பிரிவினருக்கு கூடுதலாக 10% இட ஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது. இதனையடுத்து, உயர்கல்வி, வேலைவாய்ப்பில் 10% கூடுதல் இட ஒதுக்கீடு வழங்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட இருக்கிறது.  

இந்தியா முழுமைக்கும் சமூகநீதி அடிப்படையில் இட ஒதுக்கீடு உள்ள நிலையில் பொருளாதார ரீதியாக தற்போது இட ஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதற்கு தமிழகத்தில் திமுக போன்ற சமூகநீதி சார்ந்த கட்சிகள், கடுமையாக கண்டனம் தெரிவித்திருக்கின்றன. 

இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை, “பொருளாதாரத்தில் பின் தங்கிய முற்பட்ட பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கியதை வரவேற்கிறேன். இதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படப் போவதில்லை” என கூறினார்.

மேலும், சில பிரிவினர் எந்த வாய்ப்பையும் பெறாமல் வாழ வேண்டுமா? என்றும் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கக் கூடாதா? என்றும் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.