பொருளாதாரக் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அடைக்கலம் கொடுக்கக் கூடாது: பிரதமர் மோடி வலியுறுத்தல்!

 

பொருளாதாரக் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு  அடைக்கலம் கொடுக்கக் கூடாது: பிரதமர் மோடி வலியுறுத்தல்!

பொருளாதாரக் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சர்வதேச நாடுகள் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனப்  பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.

பியூனஸ் அயர்ஸ் : பொருளாதாரக் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சர்வதேச நாடுகள் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனப்  பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.

அமெரிக்கா – மெக்சிகோ இடையிலான எல்லையில் நிலவும் அகதிகள் பிரச்சனை, கஷோக்ஜி தொடர்பாக சவுதி  அரேபியா மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள், ரஷ்யா – யுக்ரேன் இடையே நிலவும் பதற்றம், பிரிட்டனின் பிரெக்ஸிட் திட்டம் ஆகிய விவகாரங்கள் தற்போது உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், அர்ஜென்டினா நாட்டின் தலைநகர் பியூனஸ் அயர்ஸில் ஜி 20 நாடுகளின் தலைவர்களின் உச்சிமாநாடு நடந்து வருகிறது. 

இதில் கலந்து கொண்ட மோடி, சர்வதேச நிதி மற்றும் வர்த்தக, வரி அமர்வில் கலந்து கொண்ட மோடி, 9 அம்சங்களைக் குறிப்பிட்டு  பேசினார்.  பொருளாதாரக் குற்றங்களில் ஈடுபட்டு மற்ற நாடுகளுக்குத் தப்பிச் செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க ஏனைய நாடுகள் ஒத்துழைக்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை, அவர்களின் சொத்துக்களை முடக்குதல் போன்றவற்றில் சர்வதேச நாடுகள்  ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் மோடி வலியுறுத்தினார். 

பொருளாதாரக் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அடைக்கலம் கொடுக்கக் கூடாது என்றும் தெரிவித்த மோடி  பொருளாதாரக் குற்றங்களில் ஈடுபடுவோர் குறித்த தகவல் பரிமாற்றங்களுக்கு, சர்வதேச நாடுகள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.