பொருந்தா காதலர்களுக்கு செருப்பு மாலை – பஞ்சாயத்தார் அட்டூழியம்

 

பொருந்தா காதலர்களுக்கு செருப்பு மாலை – பஞ்சாயத்தார் அட்டூழியம்

சிக்கிய இளைஞனை கொன்றுவிடலாம் என முதலில் திட்டம் தீட்டியிருக்கிறார்கள். பிரச்னையாகிவிடும் என தெரிந்து அப்பையனை நையப்புடைத்து, இருவருக்கும் செருப்பு மாலை அணிவித்து ஊர் முழுக்க ஊர்வலம் அழைத்து வந்திருக்கிறார்கள். எல்லாம் முடிந்தபிறகு இருவரையும் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். இப்போது விஷயம் காவல்துறைக்குச் சென்று பஞ்சாயத்தார் ஊரைவிட்டு எஸ்கேப் ஆகி முன் ஜாமீனுக்கு அலைந்துகொண்டிருக்கிறார்கள்.

அரியானா, கர்னால் மாவட்டத்தில் இருவேறு சமூகத்தைச் சேர்ந்த வயதில் மூத்த, திருமணமான பெண்ணுக்கும், 12ஆம் வகுப்பு படிக்கும் பதின்வயது இளைஞனுக்குமிடையேயான தவறான உறவை ஊர் பஞ்சாயத்தார் கண்டுபிடித்திருக்கின்றனர். சாதி வேறு, வயதில் மூத்த பெண், ஏற்கெனவே திருமணமானவர் என பஞ்சாயத்து பார்ட்டிகளுக்கு லட்டு மாதிரி பாய்ண்ட் கிடைக்க, சிக்கிய இளைஞனை கொன்றுவிடலாம் என முதலில் திட்டம் தீட்டியிருக்கிறார்கள். பிரச்னையாகிவிடும் என தெரிந்து அப்பையனை நையப்புடைத்து, இருவருக்கும் செருப்பு மாலை அணிவித்து ஊர் முழுக்க ஊர்வலம் அழைத்து வந்திருக்கிறார்கள். எல்லாம் முடிந்தபிறகு இருவரையும் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். இப்போது விஷயம் காவல்துறைக்குச் சென்று பஞ்சாயத்தார் ஊரைவிட்டு எஸ்கேப் ஆகி முன் ஜாமீனுக்கு அலைந்துகொண்டிருக்கிறார்கள்.

Illegal affair – duo treated mercilessly

இரு தனிநபர்கள் பிரச்னை அல்லது இரு குடும்ப பிரச்னையில், பொது ஒழுங்குக்கு குந்தகம் ஏற்படாதவரை அல்லது புகார் தரப்படாதவரை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட முடியாதபோது, இந்தமாதிரி கட்டப்பஞ்சாயத்து காட்டுமிராண்டித்தனங்களுக்கு எப்போது முடிவு கிடைக்கும்? மாட்டு  வியாபாரிகள், பைக் திருடவந்தவன் என்ற சந்தேகத்தின்பேரில் அடித்து கொல்வது என வட இந்தியாவில் இம்மாதிரியான நிகழ்வுகள் அதிகம். நம்மூரிலும் உண்டுதான், ஆனால் இங்கே அது ஏற்படுத்தும் சலனம்கூட அங்கே ஏற்படுத்துவதில்லை. தனிநபர் சுதந்திரத்தில் நம் நாடு பயணிக்க வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிறது!