பொருந்தாத ஹெல்மெட் சட்டம்! மன்னிப்பு கேட்ட போலீஸ்..!

 

பொருந்தாத ஹெல்மெட் சட்டம்! மன்னிப்பு கேட்ட போலீஸ்..!

ஹெல்மெட் போடாம வந்த ஒருவர் சொன்ன காரணத்தை கேட்டு, போலீசார் அவருக்கு அபராதம் விதிக்காமல் விடுவித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஹெல்மெட் போடாம வந்த ஒருவர் சொன்ன காரணத்தை கேட்டு, போலீசார் அவருக்கு அபராதம் விதிக்காமல் விடுவித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கு ஏற்கனவே இருந்த அபராதம், மற்றும் தண்டனையை விட பல மடங்கு அதிகமாக, அபராதம் மற்றும் தண்டனை அதிகரிக்கப்பட்டுள்ளதே இந்த புதிய வாகன சட்டத்திருத்தம். மத்திய அரசு அறிமுகப்படுத்திய இத்திட்டம் செப் 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. கேரளா, மேற்குவங்காளம் போன்ற மாநிலங்கள் அபராத தொகை அதிகமாக இருப்பதால் இச்சட்டத்தை அமல்படுத்தாமல் கிடப்பில் போட்டன. உத்திர பிரதேசம், உத்தர காண்ட், குஜராத் போன்ற மாநிலங்கள் அபராத தொகையை குறைத்து அமல்படுத்தியுள்ளன.

Zakir

குஜராத் மாநிலம் சோட்டா உதேப்பூர் மாவட்டத்தில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக ஜாகீர் மாமோன் என்னும் நபர் ஹெல்மெட் போடாமல் வந்துள்ளார். அவரை நிறுத்தி விசாரித்த போலீசார் அவருக்கு அபராதம் விதிக்க தயாராகினர்.அப்போது அவர், அவசரப்படாதீர்கள்… நான் சட்டத்தை மதிக்கிற மனிதன், ஆனால் என் தலைக்கு எங்குமே ஹெல்மெட் கிடைக்கவில்லை… நானும் பல கடைகள் ஏறி இறங்கிவிட்டேன். அவர் சொன்னதற்கு ஏற்ப அவரது தலையின் அளவும் பெரிதாக இருந்துள்ளது. இதனைத்தொடர்ந்து போலீசார் அவருக்கு அபராதம் எதுவும் விதிக்காமல் அனுப்பி வைத்துள்ளனர்.