‘பொருந்தாதவர்கள் கூட்டணியால் சண்டை நடக்கிறது’: வைகோ அழகிரி மோதலை விமர்சித்த தமிழிசை

 

‘பொருந்தாதவர்கள் கூட்டணியால்  சண்டை நடக்கிறது’: வைகோ அழகிரி மோதலை விமர்சித்த தமிழிசை

கே.எஸ்.அழகிரி மற்றும் வைகோ இடையிலான மோதல் குறித்து பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தர ராஜன் விமர்சித்துள்ளார். 

‘பொருந்தாதவர்கள் கூட்டணியால்  சண்டை நடக்கிறது’: வைகோ அழகிரி மோதலை விமர்சித்த தமிழிசை

சென்னை: கே.எஸ்.அழகிரி மற்றும் வைகோ இடையிலான மோதல் குறித்து பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தர ராஜன் விமர்சித்துள்ளார். 

காஷ்மீர் விவகாரத்தில் தி.மு.க கூட்டணியிலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ,  காங்கிரஸ் கட்சிதான் காஷ்மீர் மக்களின் இந்த நிலைமைக்குக் காரணம் காங்கிரஸ் கட்சிதான் என்று குற்றச்சாட்டினார்.

alagiri

இதற்குப் பதிலளித்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, வைகோவுக்கு எதிரி பா.ஜ.க.வா? காங்கிரசா? காங்கிரஸ் பங்கேற்கிற கூட்டணியிலிருந்து கொண்டு, காங்கிரசை விமர்சிக்கிற அரசியல் நாகரீகமற்ற வைகோவை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று அறிக்கை வெளியிட்டார். 

tamilisai

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தர ராஜன்,  தமிழகத்தில் பாஜக வலுவான சக்தியாக மாறி வருகிறது. இங்கு வைகோவும் கே.எஸ்.அழகிரியும் சண்டை போட ஆரம்பித்திருக்கிறார்கள். இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்குக் காரணம் காங்கிரஸும் திமுகவும் தான் எனச் சொல்லிக் கொண்டிருந்தவர்  வைகோ.எம்பியாக தேர்வாகும் வரை அமைதியாக இருந்துவிட்டு தற்போது மீண்டும் காங்கிரசை குறை சொல்கிறார். வைகோ சொல்வதிலும் சில கருத்துக்கள் இருக்கிறது கே.எஸ்.அழகிரி சொல்வதிலும் சில கருத்துக்கள் இருக்கிறது. பொருந்தாதவர்கள் கூட்டணி அமைத்தால் இப்படி தான் சண்டை போட்டுக்கொள்வார்கள். இதற்குப் பின்னால்  பாஜக  இருக்கிறது என்ற குற்றச்சாட்டை நான் ஒப்புக்கொள்ளமாட்டேன்’ என்றார். 

 

தொடர்ந்து பேசிய அவர், நேர்மறை அரசியல்தான்  எங்கள் விருப்பம், காஷ்மீர் விவகாரத்தில் பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் ஸ்டாலின் மட்டும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்’ என்றார்.