பொய்களை கூறும் கோமாளி இளவரசர்: ராகுல் மீது அருண் ஜெட்லி கடும் தாக்கு

 

பொய்களை கூறும் கோமாளி இளவரசர்: ராகுல் மீது அருண் ஜெட்லி கடும் தாக்கு

கோமாளி இளவரசர் தொடர்ந்து பொய்களைக் கூறுகிறார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி விமர்சித்துள்ளார்

டெல்லி: கோமாளி இளவரசர் தொடர்ந்து பொய்களைக் கூறுகிறார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி விமர்சித்துள்ளார்.

வங்கிகளில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் தப்பிச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையா மற்றும் வைர வியாபாரி நிரவ் மோடி ஆகியோர் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்தாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில், இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள அருண் ஜெட்லி, கோமாளி இளவரசர் தொடர்ந்து பொய்களை கூறி வருகிறார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை விமர்சித்துள்ளார். இதுகுறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில், நிரவ் மோடியை நான் என் வாழ்வில் சந்தித்தது இல்லை. நான் நாடாளுமன்றத்தில் அவரைச் சந்தித்ததாக ராகுல் காந்தி குற்றம் சாட்டுகிறார். அப்படியென்றால், நாடாளுமன்ற பதிவேட்டில் நிச்சயம் நிரவ் மோடியின் பெயர் இருக்கும் அதைச் சோதனை செய்து கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், விஜய் மல்லையாவை நாடாளுமன்றத்தில் சந்தித்தேன். அவர் நாட்டை விட்டு தப்பிச் செல்லும் போது, என்னிடம் தகவல் தெரிவித்து விட்டுத் தப்பினார் அதற்கு நான் உதவினேன் என ராகுல் காந்தி கூறியுள்ளார். நான் விஜய் மல்லையாவிடம் பேசியதாக ராகுல் காந்தி கூறும் அனைத்துக் குற்றச்சாட்டும் பொய்யானவை. விஜய் மல்லையாவின் எந்த கோரிக்கைகளையும் நான் காது கொடுத்து கேட்டதில்லை என்றும் அருண் ஜெட்லி விளக்கமளித்துள்ளார்.

இதையடுத்து, நம்முடைய நாட்டுக்குத் தேவை நிதி அமைச்சர், பிளாக்குகளில் பிதற்றுபவர் அல்ல. அரசவைக் கோமாளியாக இருக்கிறார் ஜெட்லி என காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது.