பொம்மை கடையை விலைக்கு வாங்கிய அம்பானி!

 

பொம்மை கடையை விலைக்கு வாங்கிய அம்பானி!

லண்டனில் உள்ள ஹாம்லேஸ் எனப்படும் பொம்மை கடையை  ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் விலைக்கு வாங்கியுள்ளது. 

லண்டனில் உள்ள ஹாம்லேஸ் எனப்படும் பொம்மை கடையை  ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் விலைக்கு வாங்கியுள்ளது. 

ஆசியாவிலேயே மிகப்பெரிய கோடீஸ்வரராக  விளங்கும் முகேஷ் அம்பானி பிரிட்டனிலும் கால்பதித்துள்ளார். அங்குள்ள ஹாம்லேஸ் என்ற பிரபல பொம்மை நிறுவனத்தை 620 கோடி கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளார். 259 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஹாம்லேஸ் பொம்மை நிறுவனத்தை ஹாங்காங்கை சேர்ந்த பென்னர் என்பவரிடமிருந்து ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. உலகளவில் ஹாம்லேஸ் நிறுவனத்துக்கு 18 நாடுகளில் மொத்தம் 167 கடைகள் உள்ளன. இதுவரை சர்வதேச அளவில் சில்லறை வணிகத்தில் ஈடுபடாமலிருந்த ரிலையன்ஸ் நிறுவனம் இந்த பொம்மைக்கடை மூலம் உலக அளவில் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.