பொம்மைகளுக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவமனை!

பொம்மைகளுக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவமனை!

பொதுவாக நம் வீட்டில் குழந்தைகள் விளையாடும் பொம்மைகள்  உடைந்து போனால் அவற்றை குப்பையில் வீசிவிடுவோம். ஆனால் உடைந்துபோன பொம்மைகளுக்கு மறுவாழ்வு தருகிறது Soft Toy Hospital. 

பொதுவாக நம் வீட்டில் குழந்தைகள் விளையாடும் பொம்மைகள்  உடைந்து போனால் அவற்றை குப்பையில் வீசிவிடுவோம். ஆனால் உடைந்துபோன பொம்மைகளுக்கு மறுவாழ்வு தருகிறது Soft Toy Hospital. 

சிங்கப்பூரில் உள்ள Soft Toy Hospital என்ற மருத்துவமனை மூன்று ஆண்டுகளாக இயங்கி வருகிறது. குப்பையில் வீசப்படும் பொம்மைகளைச் சரி செய்து, அவற்றின் ஆயுள்களை நீட்டிகிறது. தம்பதிகள் இருவரும் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் சேர்ந்து இந்த சேவையை செய்துவருகின்றனர்.

toy

இதுவரை 1000க்கும் மேற்பட்ட பொம்மைகள் சரிசெய்யப்பட்டு பொம்மைகளுக்கு புத்துயிர் கொடுத்துள்ளனர். அத்துடன் சரிசெய்யப்பட்ட பொம்மைகளை இணையத்தில் விற்பனையும் செய்கின்றனர். அதிலிருந்து கிடைக்கும் தொகையைக் கொண்டு மற்ற பொம்மைகளையும் சரிசெய்கின்றனர்.

இத்துடன் பொம்மைகளின் அயுட்காலத்தை நீட்டிப்பதற்கு இந்நிறுவனம் பொதுமக்களிடையே பொம்மைப் பராமரிப்பு பயிலரங்குகளையும் நடத்தி வருகிறது.