‘பொன்.ராதாகிருஷ்ணன் விரக்தியில் இருக்கிறார்’ அமைச்சர் கடம்பூர் ராஜு விமர்சனம்!

‘பொன்.ராதாகிருஷ்ணன் விரக்தியில் இருக்கிறார்’ அமைச்சர் கடம்பூர் ராஜு விமர்சனம்!

பாஜகவும், மக்களும் ஒதுக்கி விட்டதால் பொன்.ராதாகிருஷ்ணன் விரக்தியில் இருக்கிறார் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக கூட்டணி பற்றி பல கருத்துக்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. இரண்டு நாட்களுக்கு முன்பு தான், அதிமுகவில் நீடித்து வந்த முதல்வர் வேட்பாளர் என்ற பெரும் புயல் ஓய்ந்த நிலையில் தற்போது கூட்டணி பிரச்னை எழுந்துள்ளது. நேற்று முன் தினம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், பாஜக திமுகவுடன் கூட கூட்டணி அமைக்கலாம், பாஜகவை பொறுத்தவரை சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி இனிமேல் தான் அமைக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

‘பொன்.ராதாகிருஷ்ணன் விரக்தியில் இருக்கிறார்’ அமைச்சர் கடம்பூர் ராஜு விமர்சனம்!

பொன்.ராதாகிருஷ்ணன் இவ்வாறு தெரிவித்தது பேசு பொருளாகியது. அவரது பேச்சு, அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைக்க போவதில்லையா? பாஜக திமுகவுடன் சேரப்போகிறதா? என்ற பல்வேறு கேள்விகளுக்கு வித்திட்டது. ஆள் ஆளுக்கு அதிமுக-பாஜக கூட்டணி குறித்து கருத்து தெரிவித்து வருவதால், இன்று மாலை எல்.முருகன் முதல்வர் பழனிசாமியை சந்திக்கவிருக்கிறார்.

‘பொன்.ராதாகிருஷ்ணன் விரக்தியில் இருக்கிறார்’ அமைச்சர் கடம்பூர் ராஜு விமர்சனம்!

இந்த நிலையில் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து பற்றி செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, பாஜகவும் தொகுதி மக்களும் தன்னை ஒதுக்கிவிட்டதாக அவர் விரக்தியில் இருக்கிறார் என விமர்சித்தார். மேலும், அதிகாரத்தில் இருந்த போது எதுவும் பேசாத திமுக தற்போது அரசியலுக்காக பேசி வருகிறது என்றும் தெரிவித்தார்.