பொன்.மாணிக்கவேல் என்ன நேர்மையான அதிகாரியா? அமைச்சர் சிவி.சண்முகம் பாய்ச்சல்

 

பொன்.மாணிக்கவேல் என்ன நேர்மையான அதிகாரியா? அமைச்சர் சிவி.சண்முகம் பாய்ச்சல்

சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரி பொன்.மாணிக்கவேல் என்ன நேர்மையான அதிகாரியா? என அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை: சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரி பொன்.மாணிக்கவேல் என்ன நேர்மையான அதிகாரியா? என அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு அதிகாரி பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் பிரிவில் பணியாற்றிய 60 போலீசாருக்கு பணிக்காலம் முடிந்து விட்டதால், அவர்களை திருப்பி அனுப்பி பொன் மாணிக்கவேல் உத்தரவிட்டுள்ளார். சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு புதிய குழுவை அமைக்கும் முயற்சியிலும் பொன் மாணிக்கவேல் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

இதற்கிடையே, சிலை கடத்தல் பிரிவில் பணியாற்றி வரும் கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோ, துணை போலீஸ் கண்காணிப்பாளர் பழனிசெல்வம், ஆய்வாளர் இங்ஸ்லிதேவ், ஆனந்த், பன்னீர்செல்வம் உள்ளிட்ட 13 பேர் நேற்று டி.ஜி.பி. அலுவலகம் சென்று பொன் மாணிக்கவேல் மீது புகார் மனு அளித்தனர். 

pon manickavel

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கண்காணிப்பாளர் இளங்கோ, அதிகாரி பொன் மாணிக்கவேல் தலைமையில் கடும் அழுத்தத்திற்கு மத்தியில் பணியாற்றியதாகவும், இனி தங்களால் செயல்பட முடியாது என்றும் கூறியிருந்தார்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறியதையடுத்து, “என்னுடன் பணியாற்றியவர்கள் அனைவரும் நல்லவர்களே. என்மீது குற்றச்சாட்டு கூறிய போலீசார், சிலை திருட்டு தொடர்பாக இதுவரை ஒருவரை கூட கைது செய்யவில்லை. என்னைப் பற்றி அளித்த புகாரின் பின்னணியில் ஏதோ ஒன்று இருக்கிறது. துறைக்குள் நடப்பதை போலீசார் வெளியே சொல்லலாமா?” என செய்தியாளர்கள் மூலமாக கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில், சென்னையில் இன்று இதுகுறித்து பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், “அரசுக்கும் உயரதிகாரிகளுக்கு அடிபணியாமல் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் செயல்பட்டு வருகிறார். அவர் என்ன அவ்வளவு நேர்மையான அதிகாரியா?” என காட்டமாக விமர்சித்துள்ளார்.