பொன்ராம் – சசிகுமார் கூட்டணியில் நாயகியான டப்ஸ்மாஷ் பிரபலம்!

 

பொன்ராம் – சசிகுமார் கூட்டணியில் நாயகியான   டப்ஸ்மாஷ் பிரபலம்!

சீமராஜா படத்திற்கு பிறகு இயக்குநர் பொன்ராம் சசிகுமாரை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளார்.

 நடிகர் சசிகுமார் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க  டப்ஸ்மாஷ் புகழ் மிருணாளினி ஒப்பந்தமாகியுள்ளார். 

sasi

சீமராஜா படத்திற்கு பிறகு இயக்குநர் பொன்ராம் சசிகுமாரை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளார். இதில் சசிகுமாருக்கு ஜோடியாக டப்ஸ்மாஷ் புகழ் மிருணாளினி ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.  இவர்களுடன் நடிகர்கள் சத்யராஜ், சமுத்திர கனி, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடிக்கவுள்ளனர். இப்படம் கிராமத்துப் பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இயக்குநர் பொன்ராம் சசிகுமார் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் பூஜை சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் சசிகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இப்படத்தில் வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவாளராகவும், விவேக் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.