பொன்மகள் வந்தாள் டிரைலர் வெளியீட்டு தேதி அறிவித்தார் நடிகர் சூர்யா!

 

பொன்மகள் வந்தாள் டிரைலர் வெளியீட்டு தேதி அறிவித்தார் நடிகர் சூர்யா!

ஜோதிகா நடிப்பில் உருவாகி உள்ள ‘பொன்மகள் வந்தாள்’ படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதியை நடிகர் சூர்யா தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். 

அறிமுக இயக்குநர் ஜேஜே ஃப்ரெட்ரிக் இயக்கத்தில், நடிகை ஜோதிகா பொன்மகள் வந்தாள் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ராஜசேகர் பாண்டியன் மற்றும் சூர்யா ஆகியோர் 2டி எண்டெர்டெய்ன்மெண்ட் தயாரித்துள்ளது.  இப்படத்தில் பார்த்திபன், பாக்யராஜ், பிரதாப் போத்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கோவிந்த் வசந்தா இசையில் உருவாகிவரும் இப்படத்தில் ஜோதிகா வழக்கறிஞர் வேடத்தில் நடிப்பதாக தெரிகிறது. இப்படம் மார்ச் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகவிருந்தநிலையில் ஊரடங்கு உத்தரவால் வெளியாகவில்லை.

இதனிடையே இந்தப் படத்தை நேரடியாக அமேசான் ப்ரைம் இணையதளத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இதனால்  திரையரங்கில் இப்படம் வெளியாகாது என்பது தெளிவாகியுள்ளது. இதனால் இனி 2டி எண்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் எந்த படத்தையும் திரையரங்குகளில் வெளியிடப்போவதில்லை என திரையரங்க உரிமையாளர்கள் போர்கொடி உயர்த்தினர். இந்நிலையில் ஜோதிகா நடிப்பில் உருவாகி உள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படம் வரும் 29 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் வரும் மே 21 ஆம் தேதி பொன்மகள் வந்தாள் படத்தின் டிரைலரை ட்விட்டர் பக்கத்தில் வெளியிடவிருப்பதாக நடிகர் சூர்யா அறிவித்துள்ளார்.