பொன்பரப்பி கொடூர தாக்குதல்: போராட்டத்தில் குதிக்க போவதாக திருமா அறிவிப்பு!

 

பொன்பரப்பி கொடூர தாக்குதல்: போராட்டத்தில்  குதிக்க  போவதாக திருமா அறிவிப்பு!

பொன்பரப்பி கிராமத்தில் தாக்குதலைக் கண்டித்து, ஏப்ரல் 24ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திருமாவளவன் அறிவித்துள்ளார். 

அரியலூர் : பொன்பரப்பி கிராமத்தில் தாக்குதலைக் கண்டித்து, ஏப்ரல் 24ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திருமாவளவன் அறிவித்துள்ளார். 

vote

மக்களவை தேர்தல் கடந்த 18 ஆம்  தேதி விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. அந்த வேளையில் சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில்,  விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் சின்னமான பானையை சிலர் உடைத்து சிலர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

ponparapi

இந்த மோதலில் மோதலில் ஒருவர் தாக்கப்பட்டதுடன் அங்கிருந்த 20க்கும் மேற்பட்ட ஓட்டுவீடுகளின் மேற்கூரையை உடைத்து சிலர் சேதப்படுத்தினர். இந்த தாக்குதலில் இருசக்கர வாகனமும் தீக்கிரையாக்கப்பட்ட நிலையில், பெண் உள்பட 5க்கும் மேற்பட்டோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்ததோடு  25க்கும் மேற்பட்டோர் மீது  வழக்கு பதிவு செய்தனர். 

thiruma

இந்நிலையில் பொன்பரப்பி கிராமத்தில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, ஏப்ரல் 24ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். இது குறித்து அரியலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைத்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளோம். இது போன்ற கொடூர தாக்குதல் அரங்கேறிய பின்னரும் இது குறித்து கண்டனம் தெரிவிக்காத தமிழக அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம்’ என்றார். 

ramadoss

பொன்பரப்பியில் அப்பாவிகள் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தி, வன்முறை வெறியாட்டம் நடத்தி இருக்கிறது. இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக பாதிக்கப்பட்டவர்கள் மீதே பொய் வழக்குகளை பதிவு செய்து, அவர்களின் குடும்பத்தினருக்கு போலீசார் தொல்லை கொடுப்பது கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் வாசிக்க: 144 தடை உத்தரவு; பொன்னமராவதி ஏரியா முழுவதும் பதற்றம்!